search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oval test"

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    சிறப்பாக பந்து வீசிய போதிலும் சில நேரங்களில் விக்கெட்டுக்கள் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 122 ஓவர்கள் விளையாடி 332 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 2-வது இன்னிங்சில் 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    முதல் இன்னிங்சில் முகமது ஷமி 30 ஓவர்கள் வீசினார். 7 மெய்டன்களுடன் 72 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் விக்கெட் ஏதும் வீழ்த்த முடியவில்லை. முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங், ரிவர்ஸ்-ஸ்விங் என இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். பந்து எட்ஜ் ஆகியது. ஸ்டம்பிற்கு மேலாக சென்றது. ஆனால் விக்கெட் மட்டும் விழவில்லை.



    2-வது இன்னிங்சில் 25 ஓவர்கள் வீசி 3 மெய்டனுடன் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் 55 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்கள்.

    இந்நிலையில் ‘‘சிறப்பாக பந்து வீசினாலும் சில நேரங்களில் விக்கெட் வீழ்த்த அதிர்ஷ்டமும் தேவை. குறிப்பாக புதுப்பந்தில் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளரின் முக்கிய இலக்கு சரியான இடத்தில் பந்தை தொடர்ந்து பிட்ச் செய்வதுதான். ஆனால் விக்கெட்டுக்களை அறுவடை செய்வதில் அதிர்ஷ்டமும் தேவையாக உள்ளது’’ என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக விஜய் மல்லையா மைதானத்துக்கு வந்திருந்தார். #ENGvIND #VijayMallya #OvalTest
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. வங்கிக்கடன் மோசடி செய்து விட்டு லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, மைதானத்துக்கு வருகை தந்து போட்டியை நேரில் கண்டு களித்தார்.

    மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் அடிப்படையில் மும்பை கோர்ட்டிலும் அவர் மீது நடக்கும் வழக்கில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. #ENGvIND
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்தில் மூன்றில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

    நான்காவது டெஸ்டில் மொயீன் அலி, ரஷித் அடில் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. மொயீன் அலி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியா 60 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    இந்நிலையில் நாளை இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்காவது டெஸ்டில் விளையாடிய அதே 11 பேர் இடம்பிடித்துள்ளனர். அணியில் மாற்றம் ஏதும் செய்யப்பட்டவில்லை.



    ஐந்தாவது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. பேர்ஸ்டோவ், 5. பென் ஸ்டோக்ஸ், 6 பட்லர், 7. மொயீன் அலி, 8. சாம் குர்ரான், 9. அடில் ரஷித், 10. பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    ×