search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் மீதான ஆர்வம்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவியது - ஷமி
    X

    கிரிக்கெட் மீதான ஆர்வம்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவியது - ஷமி

    கிரிக்கெட் மீதான தீராத ஆர்வம்தான் வெளியில் உள்ள பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவியது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்தினார். அவர் 19 ஒவரில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முகமது ஷமி ஐபிஎல் தொடருக்கு முன் மனைவி கொடுத்த புகாரால் சிக்கலுக்குள்ளானார். ஐபிஎல் தொடர் முழுவதுமாக அவரால் பங்கேற்க இயலவில்லை. கார் விபத்தில் இருந்து தப்பினார். அதன்பின் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்தார்.

    தனது தீவிர முயற்சியால் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டனில் சிறப்பாக பந்து வீசிய ஷமி, கிரிக்கெட்டி மீதான ஆர்வம்தான் வெளியில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது என்றார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின், குடும்ப விவகாரம் உள்பட பல பிரச்சனைகள் ஏற்பட்டன. கிரிக்கெட்டிற்கும் குடும்ப பிரச்சினைக்கும் இடையிலான போட்டியில் அதிக அளவில் போராடினேன். கிரிக்கெட்டை நான் விரும்பியதால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.



    என்னுடைய வேலையில் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதன்பின் வாழக்கையில் என்னது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று திடமாக இருந்தேன். கடினமான எந்தவொரு பிரச்சினையை சந்தித்தாலும் முதலில் கிரிக்கெட் விளையாட வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய முயற்சிக்கு சரியான பலன் தற்போது கிடைத்துள்ளது.

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் நாளில் இரண்டு விக்கெட்டும், இன்று ஒரு விக்கெட்டும் என முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    Next Story
    ×