என் மலர்

  செய்திகள்

  3-வது டெஸ்டில் 19 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்
  X

  3-வது டெஸ்டில் 19 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சுக்குழு 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த டெஸ்டில் இந்தியா பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அஸ்வினைத் தவிர மற்ற நான்கு பேரும் வேகப்பந்து வீச்சாளர்கள்.  இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். அவரது பந்து ஓரளவிற்கு டர்ன் ஆகியது. இதனால் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  துரதிருஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் 2-வது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீச்சாளர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. இதனால் அஸ்வின் பந்து வீசவில்லை. ஹர்திக் பாண்டியா ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.  இதனால் முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்களே 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 2-வது இன்னிங்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

  ஒட்டுமொத்தமாக வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒரே டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள்.  1996-ல் டர்பனில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்கள். 1997-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும், 2001-ல் கண்டியில் 18 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.
  Next Story
  ×