search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது இங்கிலாந்து
    X

    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது இங்கிலாந்து

    இன்றைய 2-வது நாளில் 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #Ashwin #Shami
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 42 ரன்களும், ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் அடித்தனர்.

    சாம் குர்ரான் 24 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஆண்டசர்ன் இரண்டு ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் குர்ரான் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் விளையாடி 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்று 10 பந்துகள் சந்தித்த இங்கிலாந்து இரண்டு ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டை இழந்தது.

    இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×