search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maintenance work"

    • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ( செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
    • மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை ( செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, இ.பி. காலனி, ஏழுமலையான் நகர் , மில்லர்புரம் , ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால் நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்.சி.ஐ. குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ் புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்புரமணிய புரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர்,என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டி.எம்.பி.காலனி, அண்ணா நகர் 2 மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர்,அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவல் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (நகர்புற விநியோகம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்க ப்பட்டு ள்ளது. மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலா மணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்கு ளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தா ன்குளம், ஈஸ்வரியாபுரம்

    ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு(என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாம ரைச் செல்வி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டி க்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான சக்கரக் கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள்.

    தாயுமான சாமி கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன் கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள்.

    சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக் கல் வீதி, கே.கே.நகர், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு சிங்காரதோப்பு, தினமலர் நகர், பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதிகளில், பெரியகருப்பன் நகர், கோட்டைமேடு, எட்டிவயல்.பட்டினம்காத்தான், ஆதம்நகர் போக்குவரத்து நகர், கழுகூரணி, சாத்தான் குளம் ஆகிய பகுதிகளிலும் ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு வதால் ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்கு வாணிவீதி படைவெட்டி வலசை பூசாரிவலசை ராமன்வலசை கும்பரம் இருட்டூரணி வெள்ளரி ஓடை சேதுநகர் காரான் முத்துப்பேட்டை பெரியபட்டணம்.

    தினைக்குளம், வள்ளிமாடன் வலசை, வண்ணான் குண்டு, பத்ராத ரவை, நயினா மரைக்கான், சேதுநகர், பிச்சா வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளிலும் நாளை (6-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலெட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • பனைக்குளம், உச்சிப்புளி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள பனைக்குளம் உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஆற்றாங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி மற்றும் அத்தியூத்து ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இதே போல் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள கீழ நாகாச்சி உயர் மின்பாதையில் நாளை (15-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ். கே. வலசை, ஆகிய மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ராமநாதபுரம் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்/ ஊரகம் சோம சுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    சென்னை:

    தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும்.

    14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

    பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு, மூன்று முறை எஸ்கலேட்டரில் பழுது ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. பின்பு கோளாறு சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    திறக்கப்பட்ட சில வாரங்கள் ஆர்வமிகுதியால் அதிகளவு பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தினார்கள்.

    தி.நகரை பொறுத்தவரை ரங்கநாதன் தெருவுக்குதான் பொருட்கள் வாங்க அதிக அளவில் மக்கள் வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்ல ஆகாய நடை மேம்பாலம் தேவைப்படுவதில்லை.

    மேலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பஸ் நிலைய பகுதிக்கு செல்பவர்களும் குறைவு. ஏனெனில் அங்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் இல்லை.

    பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்துகிறார்கள்.

    அதே போல் தெற்கு உஸ்மான் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்புபவர்களும் பஸ் நிலையத்துக்கோ அல்லது ரெயில் நிலையத்துக்கோ செல்வதாக இருந்தாலும் ஆகாய நடை மேம்பாலத்தை விரும்புவதில்லை.

    இதனால்தான் கூட்டம் குறைகிறது. பயணிகள் நெரிசலில் சிக்கி திண்டாடுவதை தவிர்க்கவே இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆகாய நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.

    • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
    • சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் இடையே இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந்தேதி(புதன்கிழமை) வரை 4 நாட்கள் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே, இந்த நாட்களில் சில மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரெயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரெயில்களும், அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரெயிலும், இன்றும், 13-ந்தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரெயில், திருவள்ளூரில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் ரெயில்கள் நாளை(திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

    ஆவடியில் இருந்து சென்டிரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

    பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயில் இன்றும், 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரெயில் வரும் 14-ந்தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

    சென்டிரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரெயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ஆவடியில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
    • கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர் மார்க்கெட் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * மூர் மார்க்கெட் - ஆவடி இடையே இரவு 11.30 மற்றும் 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * அரக்கோணம் - வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் அரக்கோணம் மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி சென்னை கடற்கரை மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி இடையே இரவு 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 9-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் 8-ந்தேதி ஆவடி மற்றும் சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது.
    • பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன்பாளையம் அணையில் இருந்து பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருகிறது.

    பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் 30-ந் தேதி நிறுத்த ப்படும். ஒன்றரை மாத கால பராமரிப்புக்குப்பின், ஜூன், 16-ந் தேதி மீண்டும் பாசன த்துக்கு திறக்கப்படும்.

    பவானிசாகர் அணையில் நீர் இருப்பு உள்ளதால் வரும் 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காளிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி குறிப்பிட்ட நாளில் திறக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தாண்டு வழக்கமான தேதியில் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முன்னதாக வாய்க்காலில் பராமரிப்பு பணி கள் மே ற்கொள்ள வேண்டும். பராமரி ப்பு பணிகளு க்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.

    இதனால் அத்யாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ள ப்படும். குறிப்பாக தண்ணீர் ஓட்ட த்தை தடுக்கும் ஊனா ங்கொடி, ஆகாயத்தாமரை போன்றவற்றை அகற்றி கழிவுகள் வெளியேற்ற ப்படும்.

    பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகள் ஓரிரு நாளில் தொடங்கி அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்யப்படும். அதன்பின், காளிங்கரா யனில் தண்ணீர் திறக்க ப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    • வருகிற 29-ந் தேதி தேவகோட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி மின் நிலையத்தில் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை தேவகோட்டை உட்கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
    • நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும்.

    திருப்பூர் :

    பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. விரைவில் பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

    அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கும். இதனால் அரசு பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணி பொதுநிதியை கொண்டு மேம்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நுழைவுவாசல், சுற்றுச்சுவர் மைதானம், வராண்டா, வகுப்பறை, கட்டிடங்கள், தினசரி இறைவணக்க கூட்டம் நடக்குமிடம், கலையரங்கம், நூலகம், ஆய்வு கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நிதிநிலைக்கு ஏற்ப பெயிண்ட், சுண்ணாம்பு பூச்சு பணிகளை தொடங்க வேண்டும். மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் அல்லது மாணவர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதிய கல்வியாண்டு தொடங்கும்போது இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணி தொடங்கி நடக்கிறது.

    • விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகாலை தரை இறங்கும் ஏர் அரேபியா விமானத்தின் நேரம் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- விமான நிலையங்களில் ஓடுதளம் பராமரிப்பு பணி 10- ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்தப் பணிகள் தொடக்கப்பட்டன.

    இதன் காரணமாக காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் நிறைவு பெறும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானம் அதிகாலை 3:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4:15 மணியளவில் புறப்பட்டு செல்லும்.

    ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இன்று 16-ந் தேதி முதல் ஏர் அரேபியா விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானம் இன்று முதல் காலை 6:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் காலை 7:20 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×