என் மலர்
நீங்கள் தேடியது "airport closed"
- தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
லண்டன்:
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையமும் இன்று இரவு 11.59 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
விமான நிலையத்துக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
விமான நிலையம் அருகில் இருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகாலை தரை இறங்கும் ஏர் அரேபியா விமானத்தின் நேரம் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- விமான நிலையங்களில் ஓடுதளம் பராமரிப்பு பணி 10- ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கோவை சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் இந்தப் பணிகள் தொடக்கப்பட்டன.
இதன் காரணமாக காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் அனைத்து விமான சேவைகளும் நிறைவு பெறும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானம் அதிகாலை 3:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் 4:15 மணியளவில் புறப்பட்டு செல்லும்.
ஓடுதள பராமரிப்பு பணி காரணமாக இன்று 16-ந் தேதி முதல் ஏர் அரேபியா விமானம் இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.வாரத்தில் தற்போது 5 நாட்கள் கோவை ஷார்ஜா இடையே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விமானம் இன்று முதல் காலை 6:30 மணிக்கு தரையிறங்கி மீண்டும் காலை 7:20 மணி அளவில் ஷார்ஜா புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேபாள்கஞ்ச்சிலிருந்து 21 பயணிகளுடன் ஒரு விமானம் சனிக்கிழமை இரவு வந்தது. விமானம் தரை இறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றதால் விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ஆனாலும் விமான போக்குவரத்து சுமார் 12 மணி நேரத்துக்கு தடைபட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில் சரிசெய்யப்பட்ட அந்த ஓடுபாதையின் மேல் பகுதியில் விரிசல்கள் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. #Nepal #PlaneAccident






