search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kills"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் இறந்ததால் அதிமுக சார்பில் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம், ஆம்பலாப்பட்டு தெற்குத் தெரு கிளைக் கழகப் பொருளாளர் சுந்தர பாண்டியன், மதுக்கூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு சேகர் ஆகியோர், நேற்று சென்னையில் நடைபெற்ற, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நீலகிரியில் மாரடைப்பால் இறந்த என்ஜினீயரிங் மாணவர் வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அதிகாரிகள் செலுத்திய சம்பவம் கோர்ட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மகன் பாலமுரளி. இவர் ஊட்டியில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடன் பெற்று என்ஜினீயரிங் படித்தார். கணவர் இறந்த பின்னர் தாய் மட்டுமே மகனை படிக்க வைத்தார்.

    பாலமுரளி ரூ.30 ஆயிரம் மட்டுமே வங்கியில் செலுத்தியிருந்தார். இந்நிலையில் மீதி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பாலமுரளிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் பாக்கி வங்கிக் கடனை திருப்பிச்செலுத்தாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

    இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வக்கீல் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார்.

    இருப்பினும், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததார். இதனையடுத்து நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வக்கீல் ஸ்ரீஹரி, வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்.

    இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    ராயப்பேட்டையில் மது போதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    ராயப்பேட்டை சைவ முத்தையா 4-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய நண்பர் தினேஷ். பெயிண்டர். நேற்று இரவு நண்பர்கள் இருவரும் வீட்டின் 2-வது மாடியில் இருந்து மது அருந்தினார்கள் 11.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

    அப்போது மது போதையில் தள்ளாடிய தினேஷ் அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் அருகில் உள்ள வீட்டின் ஓட்டு கூரை உடைந்து வீட்டுக்குள் விழுந்துவிட்டார்.

    அந்த வீட்டுக்குள் நடேஷ் பாபு என்பவரின் மனைவி ஜெயந்தி (25), அவருடைய மகன் சாரதி (1) ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் மீது தினேஷ் விழுந்தார். இதில் தாய், மகன் இருவரும் காயம் அடைந்தனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷ், காயம் அடைந்த ஜெயந்தி, சிறுவன் சாரதி ஆகியோர் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இதில், 2-வது மாடியில் இருந்து விழுந்த பெயிண்டர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இவர் விழுந்ததால் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் மகள் பலியானார்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள சுப்பே கவுண்டன் புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சூலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகள் திஷா (13). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் மிதுன் சக்கரவர்த்தி. பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.

    நேற்று திஷா தனது அண்ணன் மிதுன் சக்கரவர்த்தியுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றார். அவர்கள் அம்பராம் பாளையம் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதியது.

    இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திஷா பரிதாபமாக இறந்தார். மிதுன் சக்கரவர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருபுவனையில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    திருபுவனை:

    மதகடிப்பட்டு அருகே கொத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 37). இவர் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை இவர் பாக்கம் கூட்டு ரோட்டை சேர்ந்த தனது உறவினர் பெண் ஜோதியம்மாள் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    திருபுவனை ஏரிக்கரை அருகே வந்த போது, இவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த வீராணம் கிராமத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலையும், ஜோதியம்மாளும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்து போனார். ஜோதியம்மாள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை நைனார் மண்டபம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 75). இவர், நேற்று மதியம் தவளக்குப்பத்தில் உள்ள தனது உறவினரின் கடைக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டியில் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    சுண்ணாம்பாறு கேன்சர் சென்டர் அருகே வந்த போது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக அர்ச்சுணன் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அர்ச்சுணன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது போல் தவளக்குப்பம்- அபிஷேகப்பாக்கம் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 42 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயத்துடன் கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து வாகனம் மோதி படுகாயம் அடைந்தவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர் அருகே தந்தையே தனது 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). டெய்லர். இவரது மனைவி கமலா (32). இவர்களுக்கு மேகலா (9). திவ்யகலா (7) என்ற 2 மகள்கள் இருந்தனர். அங்குள்ள அரசு பள்ளியில் மேகலா 4-ம் வகுப்பும், திவ்யகலா 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாகவே வெங்கடேசன் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் குடும்ப நடத்துவதற்காக கமலா கீரை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் என்னால் குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாது.

    நீ வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த கமலா தனது 2 மகள்களையும் தாய் வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்.

    மனைவியின் இந்த முடிவு வெங்கடேசனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று காலை வழக்கம் போல் கமலா கீரை வியாபாரத்துக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் இருந்த வெங்கடேசன், தனது 2 மகள்களையும் கழுத்தை நெரித்து கொன்று கட்டிலில் படுக்க வைத்தார். உடனே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நேற்று மாலை வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த கமலா அங்கு கணவன் மற்றும் 2 மகள்களும் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    உடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் இதுகுறித்த விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த வெங்கடேசன் மற்றும் அவரது 2 மகள்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றங்கரையோரம் குளித்தபோது நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    சத்தியமங்கலம்:

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் ஆனந்த் (வயது 18). ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மகன் எபின் (23). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் கொண்டமுத்தனூர் கிராமத்தை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரைக்கு வந்தனர்.

    அவர்களுடன் நண்பரான அலெக்ஸ் என்பவரும் வந்திருந்தார். ஆனந்தும், எபினும் ஆற்றில் இறங்கி குளித்தனர். அலெக்ஸ் ஆற்றங்கரையில் நின்றார்.

    குளித்துக்கொண்டிருந்த ஆனந்தும், எபினும் ஆற்றின் ஆழமாக பகுதிக்கு சென்றனர். இதனால் அவர்கள் ஆற்று நீரில் மூழ்கினர். இதை பார்த்த அலெக்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் ஆற்றில் இறங்கி 2 வாலிபர்களையும் தேடினர். நேற்று பகலில் நடந்த இந்த தேடுதல் பணியில் அந்த பகுதி மீனவர்களும் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை வரை தேடியும் 2 வாலிபர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் நேற்று தேடும் பணி நிறத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்களும், மீனவர்களும் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது ஆற்றில் மூழ்கிய ஆனந்த் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் அவர் ஆற்றில் மூழ்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்படாம்பாளையம் பிரிவில் ஆற்றில் மிதந்தது.

    உடலை பார்த்து ஆனந்தின் உறவினர்கள் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஆற்றில் மூழ்கிய இன்னொரு வாலிபரான எபினும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவரது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.
    கோவையில் சாலையில் நடந்து சென்ற விவசாயி மீது கார் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 70). விவசாயி.

    சம்பவத்தன்று இவர் ஆனைமலை- வேட்டைக்காரன்புதூர் ரோட்டில் நடந்து சென்றார். ஓடையாகுளம் சந்திப்பு அருகே சென்றபோது எதிரில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காடம்பாறை மின்சார வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (35). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வால்பாறை- பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். சண்முகாபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கடையில் வேலை பார்க்கும் சூலூரை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தென்னம்பாளையம் நோக்கி சென்றார்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பச்சாத்தி(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரில் நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பூர்:

    திருவாரூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் அருள்பிரகாஷ்(18). பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லாததால் இவர் வேலை தேடி திருப்பூர் வந்தார்.

    பின்னர் திருப்பூரில் உள்ள பாஸ்கர் என்பவரது ஓட்டலில் சப்ளைராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு தங்கும் இடத்தையும் பாஸ்கரே செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தான் வேலைபார்க்கும் ஓட்டலில் இருந்து அருள்பிரகாஷ் பணத்தை திருடி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் அருள்பிரகாசை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.

    இதனால் ஆதரவின்றி தவித்த அருள்பிரகாஷ் எங்கு செல்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் அருள்பிரகாஷ் 2 லிட்டர் பெட்ரோலை ஒரு கேனில் வாங்கிக் கொண்டு திருப்பூர் குமார் நகர் ஆட்டோ ஸ்டேண்டு பகுதிக்கு வந்தார். பின்னர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

    தீ வேகமாக எரிய ஆரம்பித்ததும் வலி தாங்க முடியாத அவர் நடுரோட்டில் அங்கும், இங்கும் ஓடினார். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அருள்பிரகாஷ் உடலில் எரிந்த தீயை அணைத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு அருள் பிரகாஷ் இறந்தார்.

    இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூலூர் அருகே வெவ்வேறு பகுதியில் நடந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    சூலூர் பூரண்டாம் பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (55). கூலி தொழிலாளி. இவர் வேலை முடிந்து பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் செஞ்சேரி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனம் சுந்தரம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது உறவினர்கள் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    சூலூர் அருகே உள்ள பள்ள பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாலகிருஷ்ணன் (28). இவர் பாப்பம்பட்டி பகுதியில் இருந்து இடையர்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியதில் பாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே பாலகிருஷ்ணன் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். #SouthSudan
    ஜுபா:

    தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து 24 பயணிகளுடன் தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இன்று ஈரோல் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.

    செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஈரோல் நகரின் அருகே ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த 21 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #SouthSudan #SouthSudanplanecrash
    ×