search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Joe Root"

    இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #JoeRoot #AlasterCook
    லண்டன்:

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்தில் மூன்றில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இதற்கிடையே, இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்ட்ர் குக் ஓய்வு பெறுகிறார்.
     
    33 வயதான குக் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் குவித்துள்ளார்.



    இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்புவதே சிறப்பாக இருக்கும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த வாரம் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான வாரமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக நிறைய போட்டிகளில் விளையாடிய வீரர் ஓய்வு பெறுவது எங்களுக்கு பெரிய இழப்பாகும்.

    ஓய்வுபெறும் அலெஸ்டர் குக்கை 4-1 என்ற வெற்றி கணக்கில் வழியனுப்ப முடிவு செய்துள்ளோம். அதையே இலக்காக கொண்டு இந்த போட்டியில் விளையாட உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #JoeRoot #AlasterCook
    இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார். #ViratKohli #JoeRoot
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் பிரையன் லாரா. இவருடைய காலத்தில் விளையாடிய வீரர்கள் இவரை தவிர்த்து ஏதும் கூறிவிட முடியாது. முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டவர்.



    டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி பெரும்பாலான நேரத்தில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்.



    இடது கை பேட்ஸ்மேன் ஜாம்பவான் ஆன பிரையன் லாரா இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட்டும், துணைக் கேப்டன் ஜோஸ் பட்லரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாடுகிறார்கள். #BigBash2018
    இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் பொதுவாக வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் தொடரில் பங்கேற்று விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது ஏராளமான வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்கில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    2018 ஐபிஎல் தொடரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடினார்கள். டெஸ்ட் அணி கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன ஜோ ரூட் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகவில்லை. அவரை எந்த அணியில் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.



    இந்நிலையில் தற்போது ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோரை பிக் பாஷ்  டி20 லீக்கில் விளையாடும் சிட்னி தண்டர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 2018-19 சீசனில் இருவரும் ஏழு போட்டிகளில் விளையாடுவார்கள்.

    ஜோஸ் பட்லர் முதல்முறையாக விளையாட இருக்கிறார். அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர் கடந்த பிக்பாஷ் சீசனில் 202 ரன்கள் சேர்த்தார்.
    மைக் டிராப் சைகை மூலம் என்னை கிண்டல் செய்தது ஒட்டுமொத்த தொடருக்கும் நறுமணம் சேர்த்தது மாதிரி என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது ஜோ ரூட் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலியின் அற்புதமான த்ரோவால் டைரட் ஹிட் மூலம் ரன்அவுட் செய்யப்பட்டார்.

    ஜோ ரூட் ஆட்டமிழந்ததும் விராட் கோல, மைக் டிராப் சைகை காட்டி கிண்டல் அடித்தார். இந்நிலையில் விராட் கோலியின் கிண்டல் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு நறுமணம் சேர்த்தது மாதிரி என்று ஜோ ரூட் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘விராட் கோலியின் சைகை ஆட்டத்தின் சுவாரஸ்யத்துடன் சேரக்கூடியது. ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி, கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது பொழுதுபோக்காக இருக்கும்.

    அவுட்டாகும் தருணம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் கடினமான நிலையாகும். அந்த நேரத்தில் விராட் கோலி சைகை வருத்தத்தை அளித்தது. நான் அவுட்டாகும்போது விராட் கோலியின் சைகையை காணவில்லை. வீரர்கள் அறை சென்ற பிறகு பார்த்தேன்.



    ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். இந்த தொடரின் ஒட்டுமொத்த டிராமாவில் இது இணைந்துள்ளது. இந்த தொடரில் இன்னும் பார்க்கலாம். விராட் கோலியின் செயல்பாடு எங்களுக்கு உத்வேகமாக அமையுமா? என்பதை போகபோகத்தான் பார்க்க வேண்டும்.

    இது கூடுதலாக கொஞ்சம் நகைச்சுவையை கொடுக்கும். இது மேலும் பொழுது போக்கான தொடராக மாற்றியுள்ளது’’ என்றார்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 80 ரன்னில் ரன்அவுட் ஆன ஜோ ரூட்டை மைக்-டிராப் கொண்டாட்டம் சைகை மூலம் பதிலடி கொடுத்தார் விராட் கோலி. #ViratKohli #JoeRoot
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    பார்ட்னர்ஷிப் 100-ஐ தாண்டிச் சென்றது. 63-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பேர்ஸ்டோவ் லெக்சைடு அடித்து விட்டு வேகமாக ஓடினார். அவர் இரண்டு ரன்கள் ஓட ஜோ ரூட்டை அழைத்தார்.

    ஜோ ரூட் வேகமாக ஓடினார். அதேவேளையில் விராட் கோலி பந்தை துரத்தி பிடித்து அற்புதமான வகையில் த்ரோ செய்தார். பந்து டைரக்டாக ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3 ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இவரது சதத்தால் இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் பேட்டை கீழே போட்டார். இதை மைக்-டிராப் கொண்டாட்டம் (mic-drop celebration) என்பார்கள்.

    இதை ஞாபகத்தில் வைத்திருந்த விராட் கோலி நேற்று ஜோ ரூட் ஆட்டமிழந்ததும் மைக்-டிராப் கொண்டாட்டத்தை சைகையின் மூலம் செய்து காட்டி ஜோ ரூட்டை வெறுப்பேற்றினார். இதன்மூலம் விராட் கோலி செய்தது சரியா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் அரைசதம் அடித்த ஜோ ரூட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #ENGvIND #JoeRoot
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அலஸ்டைர் குக் ஆட்டமிழந்ததும் கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.

    43 ரன்னைத் தொடும்போது டெஸ்ட் போட்டியில் ஆறாயிரம் ரன்னைத் தொட்டர் ஜோ ரூட். அத்துடன் டெஸ்ட் போட்டியில் குறைந்த நாட்களில் (2058) 6 ஆயிரம் ரன்னை தொட்டு வேகமாக அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.



    இந்த அரைசதம் மூலம் தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிராக 12 டெஸ்டில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு வீரர் அதிகமுறை ஒரு அணிக்கெதிராக அரைசதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடி 9 முறை அரைசதம் அடித்துள்ளனர்.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

    அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


    ஜென்னிங்ஸ்

    அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


    ஜோ ரூட்

    முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    விராட் கோலியை அவுட்டாக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #ENGvIND #JoeRoot
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெற்றிக் கோப்பையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் அறிமுகப்படுத்தினார்கள்.

    அதன்பின் இருவரும் தனித்தனியாக தொடர் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்கள். அப்போது விராட் கோலியை அவுட்டாக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘விராட் கோலியை வீழ்த்த நாங்கள் வலுவான திட்டத்தை வகுத்துள்ளோம். இறுதியாக நீங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரருக்கு எதிராக விளையாடும்போது, பொதுவாக இதுதான் விடையாக இருக்கும். அவருக்கு எதிராக சரியான திசையில் பந்து வீசும் வீரர்களை நாங்கள் பெற்றுள்ளோம். அவரை எப்படி வீழ்த்துவது என்பதில் தெளிவாக உள்ளோம்.



    என்னுடைய பார்வையில் விராட் கோலி சிறந்த வீரராக இங்கு வந்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நான்கு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்’’ என்றார்.
    இங்கிலாந்து அணி மிகவும் கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய மந்திரத்துடன் களம் இறங்குங்கள் என்று முன்னான் வீரர் வாகன் இங்கிலாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2011 மற்றும் 2014-ல் படுதோல்வியடைந்த இந்தியா, இந்த முறை தொடரை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்து கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய தார்மீக மந்திரத்துடன் களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றதுபோல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2-வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது. சில நேரங்களில் ஒவ்வொரு வீரர்களிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கூற வேண்டும்.

    உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

    இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

    ஜோ ரூட் 16 டெஸ்டுகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார். இதை சரிசெய்ய வேண்டும்.



    கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட்டாக வீசி அவரை ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

    கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும். அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம்.

    ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று கோலியின் பிரன்ட் ஃபுட் ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்” என்றார்.
    இந்தியாவிற்கு எதிராக இரண்டு சதம் விளாசிய ஜோ ரூட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #ICCODIRankings
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    முதல் போட்டியில் சரியாக விளையாடாத ஜோ ரூட் 2-வது மற்றும் 3-வது போட்டியில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் 216 ரன்கள் குவித்தார். இரண்டு போட்டியில் நாட்அவுட் என்பதால் சராசரி 216 ஆகும். இதன்மூலம் 818 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    இந்திய அணி கேப்டன் 75, 45 மற்றும் 71 ரன்கள் அடித்தார். சராசரி 63.66 ஆகும். இதன்மூலம் முதன்முறையாக ஒருநாள் தொடரில் 911 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். ஓராண்டு தடை பெற்றுள்ள வார்னர் 5-வது இடத்திற்கும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 6-வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர். ரோகித் சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
    லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் போட்டியில் விளையாடியதுபோல் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    முதல் 10 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்வேட்டைக்கு தடைபோட்டார் குல்தீப் யாதவ்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ரூட் நிதானமாக விளையாட மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், 51 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 30.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் டேவிட் வில்லே ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து 41.4 ஓவரில் 239 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 96 பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.


    31 பந்தில் 51 ரன்கள் சேர்த்த டேவிட் வில்லே

    டேவிட் வில்லே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் டேவிட் வில்லே இரண்டு பவுண்டரியுடன் ஒரு சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பாண்டியா வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் அடித்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட். 109 பந்தில் சதம் அடித்த ஜோ ரூட்டிற்கு இது சர்வதேச அளவில் 12-வது சதமாகும்.

    டேவிட் வில்லேயின் அதிரடியால் 48-வது ஓவரை 300 ரன்னைத் தாண்டியது. டேவிட் வில்லே கடைசி ஓவரின் 5-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த டேவிட் வில்லே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    3-வது டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #ENGvIND #JoeRoot
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டியிலும் விளையாடிய டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    தலைசிறந்த வீரரும், டெஸ்ட் அணி கேப்டனும் ஆன ஜோ ரூட் நீக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் டி20 போட்டியில் ஜோ ரூட்டை நீக்கியது, அவருக்கு உத்வேகம் கொடுக்கும் என பயிற்சியாளர் ஃபார்பிரேஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பார்பிரேஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரருக்கும் அவருடைய விளையாட்டு காலத்தில் கடினமான நிலை அல்லது அணியில் இருந்து நீக்கப்படும் நிலைமை ஏற்படலாம். ஜோ ரூட் கடின பயிற்சி எடுத்து அதிக ரன்கள் குவித்து பதிலடி கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்.

    ஜோ ரூட் கசப்பான ஏமாற்றத்தை பெற்றிருப்பார். ஆனால், இந்த ஏமாற்றத்தை ஒரு உத்வேகமாக எடுத்துக் கொண்டு வியாழக்கிழமை தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு சிறப்பான வகையில் திரும்புவார்’’ என்றார்.
    ×