என் மலர்

  செய்திகள்

  விராட் கோலியை தூக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது- ஜோ ரூட்
  X

  விராட் கோலியை தூக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது- ஜோ ரூட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விராட் கோலியை அவுட்டாக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். #ENGvIND #JoeRoot
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான வெற்றிக் கோப்பையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் அறிமுகப்படுத்தினார்கள்.

  அதன்பின் இருவரும் தனித்தனியாக தொடர் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்கள். அப்போது விராட் கோலியை அவுட்டாக்க எங்களிடம் வலுவான திட்டம் உள்ளது என்று ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘விராட் கோலியை வீழ்த்த நாங்கள் வலுவான திட்டத்தை வகுத்துள்ளோம். இறுதியாக நீங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரருக்கு எதிராக விளையாடும்போது, பொதுவாக இதுதான் விடையாக இருக்கும். அவருக்கு எதிராக சரியான திசையில் பந்து வீசும் வீரர்களை நாங்கள் பெற்றுள்ளோம். அவரை எப்படி வீழ்த்துவது என்பதில் தெளிவாக உள்ளோம்.  என்னுடைய பார்வையில் விராட் கோலி சிறந்த வீரராக இங்கு வந்துள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நான்கு வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்’’ என்றார்.
  Next Story
  ×