என் மலர்

  செய்திகள்

  கோபமான அணி, விராட் கோலிக்கு சவால்- இதுவே தார்மீக மந்திரம்- இங்கிலாந்துக்கு வாகன் அறிவுரை
  X

  கோபமான அணி, விராட் கோலிக்கு சவால்- இதுவே தார்மீக மந்திரம்- இங்கிலாந்துக்கு வாகன் அறிவுரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து அணி மிகவும் கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய மந்திரத்துடன் களம் இறங்குங்கள் என்று முன்னான் வீரர் வாகன் இங்கிலாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND
  இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2011 மற்றும் 2014-ல் படுதோல்வியடைந்த இந்தியா, இந்த முறை தொடரை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.

  இந்நிலையில் இங்கிலாந்து கோபமான அணி, விராட் கோலிக்கு சவால் ஆகிய தார்மீக மந்திரத்துடன் களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.

  இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெட்டிங்லேயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றதுபோல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபம் மற்றும் ஆவேசமாக ஆட வேண்டும் என்று அணியிடம் வலியுறுத்த வேண்டும்.

  பாகிஸ்தானுக்கு எதிரான ஹெட்டிங்லே 2-வது டெஸ்டின் முதல் நாளில் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று வீரர்களிடம் கூற வேண்டும். சில வேளைகளில் அணியின் விவாதத்தின்போது இப்படி செய்ய இயலாது. சில நேரங்களில் ஒவ்வொரு வீரர்களிடம் பேசும்போது அதற்கு பலன் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் சென்று, பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட லீட்ஸிற்கு ஏன் தீவிர நோக்கத்துடன் வந்தீர்கள்? என்று கூற வேண்டும்.

  உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷித் விவகாரம் இதற்கு உதவும்.

  இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது. அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் ஒவ்வொரு வாரமும் மனநிலையில் அதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

  ஜோ ரூட் 16 டெஸ்டுகளில் 50-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார். இதை சரிசெய்ய வேண்டும்.  கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட்டாக வீசி அவரை ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

  கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும். அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம்.

  ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் எழுச்சி பெற்று கோலியின் பிரன்ட் ஃபுட் ஆட்டத்திற்கு சவால் கொடுக்க வேண்டும்” என்றார்.
  Next Story
  ×