search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL Auction"

    • ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சாம் கர்ரன்
    • இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. முன்னணி வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் இதன்மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் உள்ளார். இவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

    இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.
    • இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இதேபோல் இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.

    கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் வாங்கி உள்ளது. அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருக்கிறது. அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது. 

    ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் இந்த ஏலத்தில் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

    • ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கொச்சியில் இன்று நடக்கிறது.
    • ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹாரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழகத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

    இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20.45 கோடி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.42.25 கோடி

    பஞ்சாப் கிங்ஸ் - ரூ.32.2 கோடி

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.23.35 கோடி

    மும்பை இந்தியன்ஸ் - ரூ .20.55 கோடி

    டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ .19.45 கோடி

    குஜராத் டைட்டன்ஸ் - ரூ.19.25 கோடி

    ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .13.2 கோடி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .8.75 கோடி

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .7.05 கோடி

    • ஐ.பி.எல். மினி ஏலத்தில் 405 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்
    • 132 வெளிநாட்டு வீரர்கள், 273 இந்திய வீரர்கள் அடங்குவார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2023 சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக வீரர்களை விடுவிடுத்தல், அணிகளுக்கு இடையில் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற 23-ந்தேதி மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

    ஏலத்தில் பங்கேற்க பல்வேறு நாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 வெளிநாட்டு வீரர்களும், 273 இந்திய வீரர்களும் அடங்குவர்.

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாட மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்றோர் ஐ.பி.எல். அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது, மினி ஏலத்தில் பங்கேற்க அந்த நாட்டின் சுழற்பந்து வீச்சாளரான அல்லா முகமது கஜான்ஃபர் தனது பெயரை விண்ணப்பித்திருந்தார். அவரை ஐ.பி.எல். ஏலத்தில் இணைத்துள்ளது நிர்வாகம்.

    அவருக்கு 15 வயதுதான் ஆகிறது. 6 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட அல்லா முகமது கஜான்ஃபர் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் பாக்தியா மாகாணத்தை சேர்ந்தவர்.

    தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தவ்லாத் அகமது சாய் ஆலோசனையின்படி சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார். முன்னதாக பிக் பாஷ் லீக்கில் விளையாட விண்ணப்பித்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலம் எடுக்கவில்லை.

    இவருக்கு இந்திய வீரர் அஸ்வினின் பந்து வீச்சு மிகவும் பிடிக்குமாம். அவரது பந்து வீச்சால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    • ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலப்பட்டியலில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உள்பட 405 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும். இதையொட்டி ஐ.பி.எல். வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் ஏலத்தில் பதிவு செய்த வீரர்களில் இருந்து 405 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதில் 273 பேர் இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்த வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் உடையவர்கள். 282 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாதவர்கள். உறுப்பு நாட்டை சேர்ந்த 4 வீரர்களும் இதில் அடங்குவார்கள்.

    ஏலத்தில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வளர்ந்து வரும் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ரிலீ ரோசவ், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜாசன் ராய், வெஸ்ட்இண்டீசின் நிகோலஸ் பூரன் உள்பட 19 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.2 கோடியில் இருந்து இவர்களின் ஏலத்தொகை தொடங்கும்.

    இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா உள்பட 11 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாகவும், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்களின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சீனியர் வீரர்கள் இஷாந்த் ஷர்மா, ரஹானே, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் தொடக்க விலை ரூ.50 லட்சமாகும்.

    எப்போதுமே வேகப்பந்து வீசும் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். எனவே பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கர்ரன் போன்ற வீரர்களை வாங்க பல அணிகள் முயற்சிக்கும் என்பதால், அவர்களுடைய ஏலத்தொகை தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது.

    ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தான் ஏல கையிருப்பு தொகை அதிகமாக இருக்கிறது. ரூ.42¼ கோடி வைத்து இருக்கும் அந்த அணி 13 வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.20.45 கோடி உள்ளது. அந்த அணி அதிகபட்சமாக 7 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித், பாபா இந்திரஜித், திரிலோக் நாக், சோனு யாதவ், முருகன் அஸ்வின், சூர்யா, பி.அனிருத், என்.ஜெகதீசன், பி.ராக்கி, சுரேஷ்குமார், அஜிதேஷ், சஞ்சய் யாதவ், சித்தார்த், ஹரி நிஷாந்த், சந்தீப் வாரியர், எஸ்.அஜித் ஆகிய 16 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். லிஸ்ட் ஏ போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த என்.ஜெகதீசனை வசப்படுத்த அணிகள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும்.

    • அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள்.

    மும்பை:

    2023-ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 23-ந்தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

    ஏலத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்வது கடந்த நவம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க 991 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 714 பேர் இந்தியர்கள். 14 வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 பேர் பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசி லாந்தில் இருந்து 27 வீரர் களும், இலங்கையில் இருந்து 20 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    மொத்தம் 277 வெளி நாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அணி நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்து கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை தான் ஏலத்தில் தேர்வு செய்ய முடியும்.

    பதிவு செய்த 991 வீரர் களில் 185 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள். 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள். 20 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1.50 கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் என உள்ளது. இதில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் 21 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர்.

    பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், வில்லியம்சன், நிகோலஸ் பூரன், கேமமுன் கரீன் உள்பட 21 பேர் ரூ.2 கோடி அடிப்படையில் உள்ளனர். ரூ.2 கோடி மற்றும் ரூ.1.50 கோடி அடிப் படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ரூ.1 கோடி பட்டியலில் மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், மனீஷ் பாண்டே ஆகிய 3 இந்திய வீரர்கள் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த பிராவே ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

    • ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஐ.பி.எல். மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மும்பை:

    கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற தொடர்களில் ஐ.பி.எல்லும் ஒன்றாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசன் 2023 ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமாகின்றன. அடுத்தாண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். 2023 தொடருக்கான மினி ஏலம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் விளையாடும் 10 அணிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படும்
    • தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

    ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஏலத்துக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் முறையே ரூ.3.45 கோடி, ரூ.2.95 கோடி மீதமுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முழு பர்சையும் தீர்த்து விட்டது.

    இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கைப்பற்றப்பட்டது.

    2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி திடீரென அறிவித்தார். சமீபத்தில் அவர் 20 ஓவர் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டோனி இந்திய வீரர்களில் சிறந்தவர் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா உற்பத்தி செய்துள்ள கிரிக்கெட் வீரர்களில் டோனி தான் சிறந்த வீரர். அவர் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதாக கூறி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னை விட நாடுதான் முக்கியம் என்று கருதும் டோனிக்கு தலை வணங்குகிறேன்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது, “சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருப்பார்” என்று புகழ்ந்துள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. #IPLAuction2019 #YuvrajSingh
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது.

    இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. எஞ்சியுள்ள வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

    இதற்கான ஏலப்பட்டியலில் மொத்தம் 356 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 5 வீரர்கள் கடைசி நேரத்தில் பட்டியலில் இடம் பெற்றனர்.

    இதில் 60 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள் 8 அணிகளும் சேர்த்து இதற்காக மொத்தம் ரூ.106.80 கோடி செலவழித்தது.

    இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

    அவருக்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். முதல் சுற்றில் யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் அவர் ஏலம் போகமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 2-வது சுற்றில் அவரை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கே எடுத்துக்கொண்டது.

    இதன்மூலம் யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. அவர் 2015-ம் ஆண்டில் அதிகமாக ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது. 2014-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.14 கோடிக்கு எடுத்து இருந்தது.

    2016-ல் இருந்து அவருக்கான விலை சரிய தொடங்கியது. அந்த ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.7 கோடிக்கு வாங்கி இருந்தது. கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) விலை போனார். தற்போது அவரது விலை ரூ.1 கோடியாக குறைந்துள்ளது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி கொடுத்து வேகப்பந்து வீரர் மொகித்சர்மாவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதேபோல ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக்கொண்டதால் 2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. #IPLAuction2019 #YuvrajSingh
    முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே வாங்கியது #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

    ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.

    அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
    ×