search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband arrested"

    கமுதி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

    கமுதி:

    கமுதி அருகேயுள்ள அபிராமம் நகரத்தார் குறிச்சியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (38). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகனும் உள்ளனர்.

    கடந்த சில மாதமாக செல்லப்பாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரால் வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராக்கியின் நடத்தையில் செல்லப்பாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராக்கியை அவதூறாக பேசினார்.

    இந்த நிலையில் ராக்கி இன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆவேசமாக வந்த செல்லப்பாண்டி சரமாரியாக ராக்கியை அரிவாளால் வெட்டினார்.

    இதைப்பார்த்த அவர்களது குழந்தைகள் அலறித்துடித்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து அபிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் அபிராமம் இன்ஸ் பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ் பெக்டர்கள் முருகன், சித்ராதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டியை கைது செய்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக்காதல் மோகத்தினால், கணவர் தன் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #punjabwomankilled
    ராய்ப்பூர்:

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ரவ்னீத் கவுர் ஆவார். இவர் கடந்த மார்ச் 14ம் தேதி பிரசவத்திற்காக பஞ்சாப்பில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவு வீட்டின் உள்ளே இருந்து செல்போனில் கணவர் ஜஸ்பிரீத்துடன்  வீடியோ காலில் பேசிக் கொண்டே வெளியே வந்துள்ளார். அப்போது அவரை யாரோ கடத்தியுள்ளனர்.

    இதையடுத்து அவரது அண்ணன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பெண்ணின் சடலம் பெரோசிபூர் மாவட்டத்தின் பக்ரா பகுதியில் உள்ள வடிகாலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அப்பெண்ணின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்டு நடந்த கொலை என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ரன்வீத்தின் கணவர் ஜஸ்பிரீத்திற்கு ஆஸ்திரேலியாவில் கிரண்ஜீத் கவுர் எனும் திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொன்றால் சந்தேகம் ஏற்பட்டு விடும் என்பதற்காக, பஞ்சாப்பிற்கு வந்ததை பயன்படுத்திக் கொண்டுள்ளான். ஜஸ்பிரீத், மனைவியைக் கொல்ல கிரண்ஜீத்தை அனுப்பி வைத்துள்ளான்.

    கிரண்ஜீத் தன் தங்கை மற்றும் உறவினருடன் இணைந்து ரவ்னீத்தை கடத்திச் சென்று கொன்று, வடிகாலில் வீசியுள்ளார். இதையடுத்து கணவர் ஜஸ்பிரீத் கவுர், கிரண்ஜீத் கவுர், டிரண்ஜீத் கவுர் மற்றும் சந்தீப் சிங் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ என தெரிவித்துள்ளனர். #punjabwomankilled

     



     
    கம்பம் பஸ் நிலையத்தில் மனைவியை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் அண்ணா நகர் பேச்சியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சின்னத்துரை(52). இவரது மனைவி மயில்(45). இவர்களுக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாத காலமாக மயில் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள மகள் தேவயானி உடன் வசித்து வருகிறார். மயில் கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்று விட்டு கருநாக்கமுத்தன்பட்டிக்கு செல்வதற்காக கம்பம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சின்னத்துரை மயிலிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால், வெட்ட முயன்றார். மயில் கணவனிடமிருந்து தப்பிக்க அருகே உள்ள கடைக்குள் ஓடி ஒளிய முயன்றார். ஆத்திரமடைந்த சின்னத்துரை கடைக்குள் நுழைந்து மனைவியை வெட்டினார். இதில் அவரது 3 விரல்கள் துண்டானது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். #tamilnews

    வேடசந்தூர் அருகே மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சிவனேசன் (வயது 45). இவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகள் உமா தேவி (வயது 40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கூலித் தொழிலாளியான சிவனேசன் அடிக்கடி வேலை வி‌ஷயமாக பல ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று உமா தேவி வீட்டின் மாடி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது மனைவிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் அதனால் இறந்து விட்டதாக சிவனேசன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் சிவனேசன் முன்ணுக்கு பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார். எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தனது மனைவியை அடித்துக் கொன்றதை சிவனேசன் ஒப்புக் கொண்டார்.

    கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று கோபமடைந்த சிவனேசன் உமா தேவியை அடித்து தாக்கியுள்ளார். மேலும் படியில் இருந்து விழுந்த அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சிவனேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விமலா (25). இவர்களுக்கு காவியா (4), ஸ்ரீவித்யா (2) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மாரிமுத்து, அப்பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து அப்பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் குடியேறினார். எனினும் பழைய வீட்டை காலி செய்யாததால், அங்கு சில பொருட்கள் இருந்தன.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் (20), வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவருக்கும், விமலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவில் மாரிமுத்து தன்னுடைய குடும்பத்தினருடன் புதிதாக குடியேறிய வீட்டில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் கண் விழித்த விமலா, அப்பகுதியில் உள்ள தங்களது பழைய வீட்டுக்கு சென்றார். அவரை எதிர்பார்த்து, கள்ளக்காதலன் குமாரும் அங்கு தயாராக இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பழைய வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் அதிகாலை 5 மணியளவில் கண்விழித்த குழந்தை ஸ்ரீவித்யா தன்னுடைய தாயாரை காணாததால் அழுதாள். இதனால் கண்விழித்த மாரிமுத்து மனைவியை தேடினார். ஆனால் வீட்டில் விமலா இல்லாததால், மாரிமுத்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், அப்பகுதியில் உள்ள தன்னுடைய மாமனாரின் வீட்டுக்கு சென்று விமலாவை தேடினார். அங்கும் அவர் இல்லாததால், மாரிமுத்து தனது பழைய வீட்டுக்கு சென்று பார்த்தார்.

    அங்கு விமலாவும், குமாரும் உல்லாசமாக இருந்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, இரும்பு கம்பியால் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குமார் அலறியடித்தவாறு வெளியே ஓடி விட்டார். மேலும், ஆத்திரம் தீராத மாரிமுத்து இரும்பு கம்பியால் தன்னுடைய மனைவியையும் சரமாரியாக தாக்கினார். இதில் விமலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாரிமுத்து அக்கம்பக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியுடன் சென்று, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட விமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள தீ மாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39). டிரைவர். இவரது மனைவி நிர்மலா (28) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம் மண்எண்ணையை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசிய்யா, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை பெற்ற 18 நாளில் பெண் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஆண்டிபட்டி நாச்சியார் புரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் மீனாவிற்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தையும், 18 நாளில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீனாவின் தந்தை ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் மீனா தற்கொலை செய்யவில்லை. அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

    திருமணமான நாளில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை அடிப்படையில் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மணிகண்டன், அவரது தாயார் பாக்கியலட்சுமி, சகோதரி ராஜாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மீனாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகுபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 23). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது பழனியம்மாள் எழுதிய டைரி சிக்கியது. அதில் பழனியம்மாள் அழகாக இல்லை அவரது தங்கைதான் அழகாக இருப்பதாக கூறி தினந்தோறும் சரவணன் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனை உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.

    மேலும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகா புரியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக பெரியநாயகி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியநாயகி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடப்பதாக பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெரிய நாயகியை சேகர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சேகரை கைது செய்த போலீசார், பெரியநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெண்ணை கொன்று விட்டு தலைமறைவான கணவரை போலீசார் கைது செய்தனர். அவர்களது மகள்களும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    புதூர்:

    மதுரை அருகே திருமோகூரை அடுத்துள்ள இலங்கிபட்டியை சேர்ந்தவர் பெத்தன்பெருமாள் (வயது 60). இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு முத்தாலம்மன் (13), நாகேஸ்வரி (10), காமாட்சி (18) மற்றும் ஒரு ஆண் என 4 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 30-ந்தேதி இரவு கணவன்-மனைவிஇடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெத்தன் பெருமாள் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

    இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெத்தன் பெருமாளை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பெத்தன் பெருமாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பெரியமலையத் தான்பட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பெத்தன் பெருமாளை கைது செய்தனர்.

    தாய் கொலை செய்யப்பட்டு விட்டதாலும், தந்தை கைது செய்யப்பட்டதாலும் 3 மகள்கள் உள்பட 4 பேரும் அனாதையானார்கள். அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட உறவினர்களும் முன் வரவில்லை. இதனால் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் 4 பேரும் தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் 4 குழந்தைகளுக்கும் உணவளித்து வருகிறார்.

    தாயை இழந்து, தந்தை சிறைக்கு சென்றுவிட்டதால் அனாதைகளாகிவிட்ட 4 குழந்தைகளையும் தொண்டு நிறுவனங்கள் தங்களது பராமரிப்பில் எடுத்து வளர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் பொடி முருகன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு ஆனந்தி (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இதற்கிடையே கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போல் இவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆனந்தியை பொடிமுருகன் கேபிள் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொடிமுருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். பின்னர் மனைவியுடன் சமாதானமாகி ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பொடிமுருகனுக்கும், மனைவி ஆனந்திக்கும் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொடி முருகன் சரமாரியாக ஆனந்தியை தாக்கினார். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுகுறித்து ஆனந்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து பொடிமுருகனை கைது செய்தார்.

    கணவன் குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மனைவி பூமதி கொடுத்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் அவரது கணவரை கைது செய்தனர். #HusbandArrested
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி(26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்று மகளும் இருந்தனர்.

    இந்நிலையில் கார்த்தி ரிக் வண்டி டிரைவர் வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது வாங்கி குடித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று கூறப்படுறது. மேலும் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    சம்பவத்தன்று கணவரிடம் இப்படி குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று பூமதி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பூமதி மற்றும் மகன் பூவரசன், மகள் நிலா ஆகிய 3 பேரும் உடலில் தீப்பிடித்த நிலையில் கதறி துடித்தனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

    இதற்கிடையில் இன்று காலை பூமதி மற்றும் மகள் நிலா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    முதலில் பூமதி குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீசாரிடம் பூமதி கொடுத்த வாக்குமூலத்தில் கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும் இதை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மனைவி மற்றும் குழந்தையை எரித்துக் கொன்றதாக கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்த பூவரசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #HusbandArrested
    ×