search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inciting suicide"

    • சரிதா, அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரிதா (29).

    இவர்களுக்கு கடந்த  4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களின் மகன் பவன் கிருத்திக் (3).கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதா மற்றும் அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இது குறித்து சரிதாவின் தாயார் ஜெயா பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

    • தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(32) கட்டிட கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவயானி (25).

    இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா என்ற 3 வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதன் பின்பு தூங்க சென்று விட்டனர். அதிகாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் எழுந்து வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் காலை வெகு நேரமாகியும் தேவயானி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அதன் பின்பு தேவயானியின் தாய் ரமணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து ரமணி அம்மாபேட்டை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் புகார் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகுபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 23). இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பழனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது பழனியம்மாள் எழுதிய டைரி சிக்கியது. அதில் பழனியம்மாள் அழகாக இல்லை அவரது தங்கைதான் அழகாக இருப்பதாக கூறி தினந்தோறும் சரவணன் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனை உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டு இருந்தது.

    மேலும் திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    ×