தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
Published on

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(32) கட்டிட கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவயானி (25).

இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா என்ற 3 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்பு தூங்க சென்று விட்டனர். அதிகாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் எழுந்து வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காலை வெகு நேரமாகியும் தேவயானி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதன் பின்பு தேவயானியின் தாய் ரமணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து ரமணி அம்மாபேட்டை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com