தற்கொலைக்கு தூண்டியதாக கைதான கணவர் சிறையில் அடைப்பு

சரிதா, அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக கைதான கணவர் சிறையில் அடைப்பு
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி நேரு நகர் ரேசன் கடை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (31). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சரிதா (29).

இவர்களுக்கு கடந்த  4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களின் மகன் பவன் கிருத்திக் (3).கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சரிதா மற்றும் அவரது மகன் பவன் கிருத்திக் ஆகியோர் ஒரே சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து சரிதாவின் தாயார் ஜெயா பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து போலீசார் சரிதாவின் கணவர் செல்வராஜை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப் பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com