search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killing wife"

    • ஸரியாவை கடைசியாக கண்டது ஜேரியஸ்தான் என தெரிய வந்தது
    • அக்கறையுள்ள கணவன் போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான்

    அமெரிக்காவின் வடக்கில் உள்ளது அலாஸ்கா மாநிலம்.

    இங்கு வசித்து வரும் 21-வயதான ஜேரியஸ் ஹில்டாபிராண்ட், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஸரியா ஹில்டாபிராண்ட் (21). ஸரியா அலாஸ்கா தேசிய பாதுகாப்புப்படையில் காவலராக தேர்ச்சியடைந்தவர். இவர் ப்ரெட் அண்ட் ப்ரூ அலாஸ்கா எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

    இத்தம்பதிகள் சமீபத்தில்தான் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வீடு மிட்டவுன் பகுதியில் மாக்கிங் பர்ட் டிரைவ் பகுதியில் உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து ஸரியா திடீரென காணாமல் போனார்.

    பதட்டமடைந்த இவர் கணவர் ஜேரியஸ் பல இடங்களில் அவரை தேடினார். பிறகு காணாமல் போன மனைவியை குறித்து தகவல் பெற முகநூலில், மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடிவந்தார்.

    இவருடன் ஸரியாவின் உறவினர்களும், நண்பர்களும் அவரை குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்காங்கே மக்களிடையே ஸரியாவின் புகைப்பட அடையாளங்களை வெளியிட்டு இது சம்பந்தமான துண்டு பிரசுரங்களையும் கொடுத்து தேடிவந்தனர்.

    இந்நிலையில் ஸரியாவின் உடல் ஒரு மழைநீர் கால்வாயில் காணப்பட்டது. உடனே தகவல் தரப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

    வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு நடந்து சென்ற ஸரியாவை கடைசியாக பார்த்தது ஜேரியஸ்தான் என புலன் விசாரணையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜேரியஸ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

    காவல்துறையினரின் விசாரணையில் இறுதியில் ஜேரியஸ் தன் மனைவியை கொன்றதாக ஒப்புக்கொண்டார். மனைவியை சுட்டு கொன்றதாகவும், அவர் உடலை யாருக்கும் தெரியாமல் மழைநீர் காலவாயில் பதுக்கியதாகவும்,

    பிறகு மனைவி காணாமல் போனதாக நாடகமாடி அனைவரின் உதவியுடன் தேடி வந்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டார் ஜேரியஸ்.

    சுமார் ரூ.4 கோடி ($5,00,000) பிணையில் வெளியே வரும் வகையில் அவர் மீது ஆன்கரேஜ் காவல்துறை மனைவியை கொலை செய்தது மற்றும் தடயங்களை மறைத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

    "அவளை அவனே கொன்றுவிட்டு ஒரு அக்கறையுள்ள கணவன்போல் எங்களுடன் சேர்ந்து மணிக்கணக்காக ஸரியாவை தேடினான். எனக்கு எதையும் நம்ப முடியவில்லை"என இச்சம்பவம் குறித்து ஸரியாவின் தாயார் மெரிடித் பார்னே கூறியிருக்கிறார்.

    இதுவரை கொலைக்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    தளி அருகே தகராறில் மனைவியை கொன்ற கூலி தொழிலாளி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த சின்னமத கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (40).

    கடந்த 24-ந்தேதி லட்சுமி சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மனைவியை அடித்து உள்ளார். இதனால் நிலை தடுமாறி விழுந்த லட்சுமியின் தலை கட்டிலின் முனையில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து நாகராஜை கைது செய்தார்.

    பின்னர் அவர் தேன்கனிக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மேகலா மைதிலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    கணவன் குடித்துவிட்டு தகராறு செய்ததை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக மனைவி பூமதி கொடுத்த வாக்குமூலத்தையடுத்து போலீசார் அவரது கணவரை கைது செய்தனர். #HusbandArrested
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(வயது 30). ரிக் வண்டி டிரைவர். இவரது மனைவி பூமதி(26). இவர்களுக்கு பூவரசன்(4) என்ற மகனும், நிலா(3) என்று மகளும் இருந்தனர்.

    இந்நிலையில் கார்த்தி ரிக் வண்டி டிரைவர் வேலைக்கு செல்வதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது வாங்கி குடித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று கூறப்படுறது. மேலும் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

    சம்பவத்தன்று கணவரிடம் இப்படி குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று பூமதி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பூமதி மற்றும் மகன் பூவரசன், மகள் நிலா ஆகிய 3 பேரும் உடலில் தீப்பிடித்த நிலையில் கதறி துடித்தனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

    இதற்கிடையில் இன்று காலை பூமதி மற்றும் மகள் நிலா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    முதலில் பூமதி குழந்தைகளுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் போலீசாரிடம் பூமதி கொடுத்த வாக்குமூலத்தில் கணவன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாகவும் இதை தட்டிக்கேட்ட என் மீதும் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக கூறி இருந்தார்.

    இதையடுத்து போலீசார் மனைவி மற்றும் குழந்தையை எரித்துக் கொன்றதாக கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்த பூவரசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  #HusbandArrested
    ×