search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik pandya"

    • ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது.
    • மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    பாண்ட்யாவிடம் ரோகித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாண்ட்யா பேசியது பின்வறுமாறு:-

    முதலில் ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார். இது எனக்கு உதவுகிறது. மும்பை அணி என்ன சாதித்தது. அது எல்லாமே அவரது தலைமையில் தான் சாதிக்கப்பட்டது.

    நான் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் அவரது தலைமையின் கீழ் விளையாடியிருக்கிறேன். களத்தில் அவரது கைகள் என் தோள் மீது இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
    • அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன்.

    ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடந்த சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இத்தொடரின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டார் ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களிலிருந்தும் விலகினார். இதையடுத்து தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் வரவுள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்படவுள்ளார்.

    இந்நிலையில் கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கடந்த ஓராண்டு காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். மேலும் ஒன்றரை ஆண்டு காலமாக எனது தனிப்பட்ட பயிற்சிகளில் கவனத்தை செலுத்தினேன். ஆனாது துரதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பை தொடரின் போது எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தால் என்னால் நடக்கக்கூட முடியவில்லை. எனினும் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் முடிவில் நான் இல்லை. கண்டிப்பாக நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    அதற்கான நான் அணி நிர்வாகத்திடம் எனக்கு ஒரு ஐந்து நாள் ஓய்வு கொடுங்கள், இந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்காக எனது கணுக்காலின் மூன்று இடங்களில் வலி நிவாரனி செலுத்தப்பட்டது. அதையும் மீறி தான் நான் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்தேன்.

    ஆனால் அந்த ஐந்து நாளில் நான் எடுத்த முயற்சிகள் எனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. நான் ஓய்வு எடுக்காமல் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என முயற்சி செய்ததால், அந்த ஐந்து நாள் ஓய்வு மூன்று மாத ஓய்வாக மாறிவிட்டது. உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹர்திக் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
    • பாண்ட்யா மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ந் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா மற்றும் முகமது சமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.

    ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்ட்யாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.


    கில் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும். அவர் அப்படிப்பட்ட வீரர். அவர் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக விளையாட விரும்புபவர். அவர் ஒரு நபராக வளர்ந்தால், அவர் நிச்சயமாக முன்னோக்கி செல்லும் சிறந்த கேப்டனாக இருப்பார்.

    இவ்வாறு நெஹ்ரா கூறினார்.

    ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்ட்யாவை அணியின் கேப்டனாக அறிவித்தது. இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்டியா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்தார்.
    • வெளிநாட்டவர் ஒருவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்துள்ளார்.


    இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி டிரெசிங் ரூமிற்குள் வரும் ஹர்திக் பாண்டியா விளக்கேற்றி, பூஜையை துவங்குகிறார். பிறகு, மும்பை அணியை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    • ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.

    இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதையடுத்து இருவரையும் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.

    இதற்கிடையே ஒரு ஆண்டாக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா, 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    தனது உடல் தகுதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காது என்று ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

    இதை கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டதால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

    இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு கூறியுள்ளோம்.

    தற்போதைய நிலைமையில் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் ஹர்த்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். அவர் அதில் விளையாடாவிட்டால் ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என்றார்.

    உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா உறுதி அளித்த பிறகே அவர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேபோல் ரோகித் சர்மா, விராட் கோலியும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    • இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும்.
    • கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், 2019 உலகக் கோப்பையில் இடம் பிடித்தார். அந்த தொடரில் காயத்தால் விலகினார். பின்னர் 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

    இதனை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையிலும் காயத்தை சந்தித்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர் நேரடியாக ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக விளையாட உள்ளார். அதனால் ஹர்திக் பாண்டியா நாட்டுக்காக தொடர்ந்து விளையாட மாட்டார். ஆனால் பணத்துக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போது நான் வெளியே செல்வதில்லை என்பது என்னைப் பற்றி என் ரசிகர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். கடந்த 2 -3 வருடங்களாக நான் பொதுவெளிக்கு வருவதில்லை. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளியே வருகிறேன்.

    இப்போதெல்லாம் வீட்டிலேயே இருக்க விரும்புகிறேன். அதனால் 50 நாட்கள் கூட வீட்டை விட்டு வெளியேறாத நேரங்கள் இருந்தன. அதனால் சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பதை பற்றி நான் பேசமாட்டேன். அங்கே யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.
    • ரோகித்- பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெறும். அந்த வகையில் இந்த தொடரின் 17-வது சீசன் எப்போது நடக்கும் என்பதற்கான அதிகாரபூர்வ தேதி இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை எனபது சரியாக தெரியவில்லை.

    ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா ஆகியோர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ரோகித் கேப்டனாக செயல்படாதது குறித்து பேட்டியளித்தார். இதற்கு ரோகித்தின் மனைவி ரித்திகா எதிர்ப்பு தெரிவித்தது பல விமர்சனங்களை சந்தித்தது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு கூட ஆகாத நிலையில் ரோகித் - பாண்ட்யா ஆகியோர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பான செய்தி வதந்தி எனவும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததில்லை என்று சிலரும், ரோகித்தை பின்தொடர்வதை நிறுத்தியது ஹர்திக் தான் என்றும் சிலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

    • ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.

    ஒருநாள் உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடியது. இதில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்று டி20 தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்து வரலாறு படைத்தது.

    தென் ஆப்பிரிக்கா தொடரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் அவர் இடம் பெறவில்லை. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்றனர். ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோக்கி செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே என தலைப்பிட்டிருந்தார்.

    இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள், இப்படியே போனால் ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து இந்த வீடியோவை வெளியீட்டுள்ளதாகவும் இதனால் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

    • ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
    • ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.

    இந்திய அணி விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

    அதன்படி ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையாத நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மீண்டும் ரோகித் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

    இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது.
    • ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்தியாவில் 17-வது ஐபிஎல் தொடர் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.இது குறித்து சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால கேப்டன்சி என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. தொடக்க வீரராகோ அல்லது மிடில் ஆர்டரிலோ தன்னால் என்ன முடியுமோ அதனை அணிக்காக செய்து கொடுத்தவர் ரோகித் சர்மா. குறிப்பிடத்தக்க வகையில், 2013-ம் ஆண்டு, முதல் முறையாக ஐபிஎல் கேப்டனாக ரோகித் வெற்றி பெற்றார். பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலும் நான்கு டிராபிகளை வென்றார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டிராபிகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்த நிலையில், எம்எஸ் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக டிராபியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்தது. 10 ஆண்டுகளில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டன். போட்டியை தன்மையை பொறுத்து அணியை நன்றாக வழிநடத்தினார். எப்போதும் தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருந்தார்.

    இவ்வாறு சோப்ரா கூறியுள்ளார்.

    ×