search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்- ரோகித்தை புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா
    X

    ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்- ரோகித்தை புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா

    • ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது.
    • ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்தியாவில் 17-வது ஐபிஎல் தொடர் வரும் 2024-ம் ஆண்டு நடக்க இருக்கிறது. ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலமானது துபாயில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது.

    இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.இது குறித்து சீனியர் வீரர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் ரோகித் சர்மா என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மாவின் 10 ஆண்டுகால கேப்டன்சி என்பது ஒரு சகாப்தத்தின் முடிவு. தொடக்க வீரராகோ அல்லது மிடில் ஆர்டரிலோ தன்னால் என்ன முடியுமோ அதனை அணிக்காக செய்து கொடுத்தவர் ரோகித் சர்மா. குறிப்பிடத்தக்க வகையில், 2013-ம் ஆண்டு, முதல் முறையாக ஐபிஎல் கேப்டனாக ரோகித் வெற்றி பெற்றார். பின்னர் 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலும் நான்கு டிராபிகளை வென்றார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டிராபிகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்ந்த நிலையில், எம்எஸ் டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக டிராபியை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சமன் செய்தது. 10 ஆண்டுகளில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். மிகவும் வெற்றிகரமான கேப்டன். போட்டியை தன்மையை பொறுத்து அணியை நன்றாக வழிநடத்தினார். எப்போதும் தன்னை விட அணியை முன்னிலையில் வைத்திருந்தார்.

    இவ்வாறு சோப்ரா கூறியுள்ளார்.

    Next Story
    ×