search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government employees"

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதே போன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மற்ற இடங்களிலும், மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் என்று ஜாக்டோ, ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
    ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 22ந் தேதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். #JactoGeo
    சென்னை:

    பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரி பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஜாக்டோ ஜியோ இந்த போராட்டங்களில் பங்கேற்று வேலைநிறுத்த போராட்டமும் நடந்தது.

    ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றனர். தங்கள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காததால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    அரசு புது பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும். பழைய பென்‌ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய சம்பள கமி‌ஷன் அமைக்கப்பட்டதன் அடிப்படையில் அரசு வழங்க வேண்டிய 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அரசு இதுவரை தீர்வு காண முயலவில்லை.

    எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துகிறோம். வருகிற 22-ந் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறோம்.

    மாறுபட்ட 57 சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறது. அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.

    ‘போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வேறுவழி இல்லாததால் வேலைநிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறி உள்ளனர். #JactoGeo

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. #Governmentworker #struggle

    சென்னை:

    அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடை பெறுகிறது. இது குறித்து சங்கத்தினர் பொதுச் செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசாங்க வேலை என்பது இன்னும் சில வருடங்களில் இல்லை என்னும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வில்லை. தேவைப்படும் இடங்களில் தற்காலிக பணியாளர்களை நியமித்து கொள்ளுதல், ஒப்பந்த முறையில் பணியாளர்களை அமர்த்துதல் போன்ற நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

    மேலும் தற்போது நடை முறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம், நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் கருவூல கணக்கு துறையை அரசு துறையில் இருந்து கழற்றி விடும் ஏற்பாடு துவங்கி விட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிசே‌ஷய்யா கமிட்டி அமைக்கப்படுவதற்கு முன்பே ஆட்குறைப்பு நடவடிக்கைகளும், தனியார் வசம் துறைகளை ஒப்படைக்க ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

    கருவூல கணக்கு துறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதன்மூலம் அரசு ஊழியர்களின் பணிப்பதி வேடுகள் பொது ஆவணங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு அரசு ஊழியர்களின் தனிப்பட்ட அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த முறையில் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

    தமிழக முதல்வர் இந்த வி‌ஷயத்தில் உடனடியாக தலையிட்டு மாணவர்கள், இளைஞர்கள் நலனும் வேலைவாய்ப்பு வசதிகளும் பாதிக்காத வகையில் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இளைஞர்கள், வாலிபர்கள், அரசு துறைகள், அரசு பள்ளிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்.56-ஐ திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த நடவடிகைகளும் எடுக்கப்பட வில்லை.

    தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் உலை வைக்கும் அரசாணை 56-ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நாளை (15-ந்தேதி) மாலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Governmentworker #struggle

    எந்திர கோளாறு காரணமாக பஞ்சாப் அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Amristar #GovtEmployees #DoubleSalary
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அக்டோபர் மாதம் சம்பளமாக இரு மடங்கு சம்பளம் தங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதை கண்டு அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தியுள்ளனர் என ஊழியர்கள் மகிழ்ந்தனர்.

    ஆனால், வங்கியில் ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு மாத சம்பளம் செலுத்தப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து, கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே என அரசு ஊழியர்கள் புலம்பியபடி தங்களது வேலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

    கூடுதலாக ஒருமாத சம்பளமாக 40 முதல் 50 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடட்த்தக்கது. #Amristar #GovtEmployees #DoubleSalary
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை நிலுவையில் வைக்காமல் உடனே தீர்வுகாண வேண்டும் என ஜிகே வாசன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தமிழக அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தாததும், பேச்சுவார்த்தை நடைபெற்ற போது கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறியதும், பின்பு நிறைவேற்றாமல் இருப்பதும், தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதும் இன்னும் நீடித்துக்கொண்டே போகிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான்.



    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை இனியும் நிலுவையில் வைக்காமல் உடனடி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan
    பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #GovernmentEmployee
    சென்னை:

    பணி நேரத்தின்போது அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்யவேண்டும் என்பதற்கான அறிவுரையை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு கடந்த 16.7.2018 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும், விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எனவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள ஆணையை பின்பற்றி அடையாள அட்டையை கண்டிப்பாக அனைத்து ஊழியரும் அணிய வேண்டும் என்று அவர்களுக்கு துறைத் தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு பணியாளர்கள் ஒரு நாள் சம்பளம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #KeralaFlood
    சென்னை:

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதன் நிவாரணத்துக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏற்கனவே ஒரு நாள் சம்பளம் வழங்கி இருக்கின்றனர். அதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அந்த மாநிலத்தின் மறுவாழ்வு பணிகளுக்காக வழங்கியுள்ளனர். அதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, கடுமையான இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே சில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தில் இருந்து, கேரள நிவாரணத்துக்காக ஒரு நாள் சம்பளத்தை அளிக்கலாம் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தானாக முன்வந்து அளிக்கப்பட்ட அந்த தொகையை ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம், சம்பளம் வழங்கும் அதிகாரியிடம் அளிக்கவேண்டும்.

    அந்த தொகை, கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கணக்கை கையாளும் திருவனந்தபுரம் எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் நேரடியாக பற்று வைக்கப்பட்டுவிடும்.

    அரசின் இதற்கான உத்தரவு, உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், அரசு கழகங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் பொருந்தும். தானாக முன்வந்து இந்த உதவி அளிக்கப்படுவதை, சம்பளபட்டுவாடா அதிகாரி உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #KeralaFlood
    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ஞானசேகரன், ரோஸ்மேரி, அன்வருல்ஹக், இளங்கோவன், மாவட்ட இணை செயலாளர்கள் ராமன், ராணி, பி.தங்கவேல், எம்.தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் குமரேசன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட தலைவர் நந்தகோபால், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள ரோட்டில் கைகளை பிடித்தபடி வரிசையாக நின்று கொண்டு, அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசுத்துறைகளின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 
    அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு:

    அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி ஆணையராக இருப்பவர் அசோக்குமார். இவரை அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜன் என்பவர் பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தையால் பேசினாராம்.

    மேலும் நான் சொல்கிற படிதான் நடக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்து வந்தாராம். அவரது செயலை கண்டித்து 4-ம் மண்டல அலுவலகம் முன் உதவி ஆணையர் அசோக்குமார் தலைமையில் ஊழியர்கள் 4-ம் மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க. பிரமுகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

    ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாநகராட்சி அடிமட்ட ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஆவேசம் அடைந்தனர்.

    அரசு அதிகாரியையே மிரட்டும் தொனியில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அவரை இயக்குவது யார்? என்று ஆத்திரம் கொண்டனர்.

    இன்று (புதன்கிழமை) காலை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் மாநகராட்சியின் 4 மண்டலங்களின் உதவி ஆணையர்கள் இளநிலை பொறியாளர்கள் என 1800 பேர் திரண்டு வந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டி வரும் அ.தி.மு.க பிரமுகர் கோவிந்தராஜனை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

    ஒட்டு மொத்த பணியாளர்களும் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது. பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஈரோடு பிரப் ரோடு ஸ்தம்பித்தது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய ஊழியர்களின் போராட்டம் 10 மணி வரை நீடித்தது.

    இது குறித்து 4-ம் மண்டல உதவி ஆணையர் அசோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவிந்தராஜன் எங்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறார். நான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும். என்று தொந்தரவு செய்து வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். அவர் சொல்லும் வேலையை செய்யாத ஊழியர்களை தாக்கவும் முயற்சித்தார். அவரை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்யாத வரை இங்கிருந்து கலைந்து போக மாட்டோம்“ இவ்வாறு அவர் கூறினார்.

    உடனே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் “அவரை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அவிநாசி பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஓருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கருவூலக் கணக்குத் துறை, முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது-

    தமிழக நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநிலஅரசு நிதிமேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக,தமிழக அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

    இத்திட்டத்தினைச் செயல்படுத்த கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவுற்றுள்ளன.

    சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணியினை அக்டோபர் 2018-க்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினி மயமாக்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த 4 நாட்கள் பயிற்சி பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் கருவூல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியின் கீழ் சம்பளம் மற்றும் சம்பளம் சாராபட்டியல்கள் தயாரித்தல். மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுக்கும் மேலும் பட்டியல் கடவுசெய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத் தாட்கள் மேலாண்மை, மின் அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் மற்றும் இதர இனங்கள் குறித்து கருவூலத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் அரசின் வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2350 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    7-வது ஊதிய குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வினை வழங்க வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

    ஊதிய உயர்வை அமல் படுத்த வேண்டி முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன் படி மதுரை கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.

    மதுரை புறநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் பொன்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பம்பு ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    அப்போது சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். #tamilnews

    காஞ்சீபுரத்தில் அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்படுகிறது. இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

    பயிற்சியின் போது கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-

    நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு 288.91 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

    இத்திட்டம் செயல்படுத்தப்படும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்பிக்க இயலும்.

    இதன் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும். அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்டவைகள் உடனுக்குடன் பதியப்படும்.

    இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக இத்திட்டதின் மூலம் கணினிமயமாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, கருவூலம் மற்றும் கணக்குதுறை மண் டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×