search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire accident"

    • குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது.
    • தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    செங்குன்றம்:

    சென்னை அடுத்த புழல் அம்பத்தூர் சாலை சூரப்பட்டு அருகே நங்கநல்லூரைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 80 ஆயிரம் சதுர அடியில் குடோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், வெளிநாட்டு மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இறக்கி வைக்கப்பட்டு இங்கிருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த குடோனில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் லேசான புகைமண்டலம் ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம், மாதவரம், மணலி, பிராட்வே, செம்பியம், அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 11-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    இந்த விபத்து குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேங்கர் லாரி தீப்பிடித்ததால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது.
    • மேம்பாலம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு.

    பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே ஏற்பட்ட விபத்தில் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது.

    பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலம் மீது எண்ணெய் டேங்கர் லாரி சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது.

    டேங்கர் லாரி கவிழ்ந்ததில், எண்ணெய் சாலையில் கொட்டி பல மீட்டர் தூரம் கசிந்து தீ விபத்துக்குள்ளானது.

    இதில், தீ சாலை முழுவதும் பரவி, மேம்பாலம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதனால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் தனியார் நூல் மில் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பற்றி எரியவே, தொழிலாளர்கள் ஆலையில் இருந்து உடனே வெளியேறினர். மேலும் இது குறித்து உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து 15 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.


    தீ விபத்தில் ஆலையில் இருந்த எந்திரங்கள், குடோனில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் என ரூ.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூற்பாலையில் தீ பற்றி எரிவதையும், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைப்பதையும் படத்தில் காணலாம்.

    • 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி அருகே கோவிந்தராஜன் தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு திருமணமான 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை சேகரும், அவரது மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் இருந்த குமாரி இன்று காலை சுமார் 6 மணியளவில் காய்கறி வாங்க வெளியே சென்றிருந்தார். அவர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

    இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (47). இவர் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மேத்யூ டிரஸ் மேக்கர்ஸ் என்ற பெயரில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் வேலை முடித்து விட்டு மேத்யூ கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் மேத்யூவின் டெய்லர் கடையில் இருந்து புகை வெளி வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் கடையில் இருந்த 3 தையல் மிஷின்கள், தைத்து வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் தைக்காமல் வைத்திருந்த துணிகள் என பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 தீ விபத்தையும் சேர்த்து லட்சக்கணக்கில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

    • அவுரங்காபாத் கிளவுஸ் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் 6 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் கிளவுஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழிற்சாலையை மூடியதும் ஊழியர்கள் உள்ளே படுத்து உறங்கினர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை 2.40 மணிக்கு கிளவுஸ் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உள்ளே படுத்து தூங்கிய 6 ஊழியர்கள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு மீட்கப்பட்ட 6 ஊழியர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிளவுஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 ஊழியர்கள் உடல் கருகி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுகுகு வேகமாக பரவியது.

    கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து, பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.

    பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.

    பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.

    • ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
    • பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    • தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
    • பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பி.என். ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மதியம் சுமார் 1 மணி அளவில் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை குபு குபு என வந்தது. உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மாடியில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

    • தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.

    இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    ×