search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வாகனம்"

    • தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
    • பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பி.என். ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மதியம் சுமார் 1 மணி அளவில் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை குபு குபு என வந்தது. உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மாடியில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

    • தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.

    இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
    • தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கலைஞர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. அந்த தீயணைப்புத்துறையினரின் வாகனம் பழுது ஏற்பட்டது.

    தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.

    அதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் வாகனத்தை தள்ளி செல்லும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பாணியில் வடிவேலு காமெடி போன்ற ஆ... தள்ளு... தள்ளு... போன்று சினிமா காமெடி வசனத்துடன் எடிட் செய்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.

    ×