search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "card company"

    • தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
    • பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பி.என். ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மதியம் சுமார் 1 மணி அளவில் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை குபு குபு என வந்தது. உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மாடியில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

    • சாத்தூர் அருகே அட்டை கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான அட்டை கம்பெனி பெத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கழிவு பேப்பர்களை சேகரிக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவத்தொடங்கியது. அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டைஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×