search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer suicide"

    ஏம்பலம் அருகே சாராயத்தில் எலி மருந்து கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    ஏம்பலம் அருகே மேல் சாத்தமங்கலம் தேனீபன் நகரை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 42). விவசாயி. இவர் ஏற்கனவே குடும்ப செலவுக்கு பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த கடனை திருப்பி கொடுக்காத எத்திராஜ் தனது மனைவி வள்ளிக்கு தெரியாமல் மேலும் சிலரிடம் பணம் கடன் வாங்கினார். 

    இதனை அறிந்த வள்ளி சம்பவத்தன்று கணவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த எத்திராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று எலி மருந்தை வாங்கி கொண்டு அருகில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார். அங்கு சாராயத்தில் எலி மருந்தை கலந்து குடித்தார். 

    இதில் சாராயக்கடையிலேயே எத்திராஜ் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் எத்திராஜை மீட்டு கரிக்க லாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை எத்திராஜ் பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு சடையன்கிணறு பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல் (வயது 60) விவசாயி. இவரது மனைவி மரிய பாக்கியம். சித்திரைவேலுக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

    இதில் மனமுடைந்த அவர் கடந்த 15-ந்தேதி தனது தோட்டத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சித்திரைவேல் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகேயுள்ள தென்னூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது65). விவசாயியான இவருக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

    வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த முனிராஜ் நேற்று மதியம் வீட்டில் தென்னை மரத்திற்கு வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனால் மயங்கிய நிலையில் கிடைந்த அவரை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் டிரஸ்சரி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பாலமுருகன் (வயது 36). இவர்களுக்கு பாச்சலூர் பகுதியில் காபி தோட்டம் உள்ளது. பாலமுருகனுக்கும் திண்டுக்கல் அருகே உள்ள அம்மா பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபாஷ் கிருஷ்ணன் என்ற 2½ வயது மகன் உள்ளான்.

    கிருஷ்ணவேணிக்கும் அம்மா பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கண்ணன் பெங்களூரில் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வருகிறார்.கிருஷ்ணவேணி கணவனுடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி கண்ணனை பார்க்க சென்றுள்ளார்.

    3 முறை கண்ணனுடன் தான் வாழ்வேன் என்று கூறி அவருடன் சென்றுள்ளார். பெரியவர்கள் கிருஷ்ணவேணியை அழைத்து பேசி அறிவுரை கூறி கணவனுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் பாலமுருகன் பாச்சலூர் தோட்டத்துக்கு சென்று விட்டார். கிருஷ்ணவேணி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அங்கு மகனை விட்டு விட்டு கள்ளக்காதலன் கண்ணனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அறிந்ததும் பாலமுருகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது குடும்ப மானம் கெட்டு விட்டதே என்று புலம்பி வந்துள்ளார். மேலும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது பெற்றோர் பாலமுருகனின் அறையை தட்டிய போது திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்த வி‌ஷயம் தெரிய வந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மனைவி குழந்தைகள் இறந்த துக்கத்தில் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள பால்பண்ணை தெரு தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜூ. (வயது 31). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர். இதனால் ராஜூ கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.

    மேலும் ராஜூவின் மனைவி ராமபிரியா மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜூவின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.

    இதனால் ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜூவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துமலை அருகே குடித்து விட்டு வந்ததை குடும்பத்தினர் சத்தம் போட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஊத்துமலை அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி அருள் (வயது50), விவசாயி. இவர் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர்கள் அவரை சத்தம் போட்டனர். இதில் மனமுடைந்த அந்தோணி அருள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கிருஷ்ணகிரியில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, ஜெங்கலேரி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (வயது 65). இவருக்கு அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதியும், வழக்கம் போல் அதிக அளவில் மது குடித்துவிட்டு வந்த ராமச்சந்திரன் தனது 2-வது மனைவியான மாதம்மாள் (35) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அதில் மாதம்மாள் தனது கணவர் ராமச்சந்திரனை இனி மது குடிக்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராமச்சந்திரின் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ராமச்சந்திரன் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாப்பாக்குடி அருகே காலில் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    அம்பை அருகே உள்ள பாப்பாக்குடியை அடுத்த அனந்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூசைத்துரை (வயது65), விவசாயி. இவரது குழந்தைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 

    பூசைத்துரை மட்டும் அனந்தநாடார் பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். தற்போது அவரது காலில் நீரழிவு நோய் காரணமாக புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த பூசைத்துரை நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    தஞ்சாவூர்:

    கஜா புயலில் டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை பலத்த சேதமானது. புயலில் ஏராளமான மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்து சேதமானது.

    விவசாயிகளுக்கு இந்த புயல் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமாகின. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் மரங்கள் அழிவை சந்தித்துள்ளன. இந்த அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு இன்னும் பல ஆண்டு காலம் பிடிக்கும்.

    இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையை அடுத்த சோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 52). விவசாயியான இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சாமிக்கண்ணு தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். ஆனால் கஜா புயலில் அவருடைய கரும்பு சாய்ந்து சேதமானது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி சாமிக்கண்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் கரும்பு கொல்லையில் மயங்கி கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது சாமிக்கண்ணு வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது.

    உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது கரும்பு விவசாயி சாமிக்கண்ணும் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    புற்று நோய் பாதிப்பால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கால் பகுதியில் கேன்சர் நோய் வந்தது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. 2 கால்களிலும் வலி அதிகமானது. 

    இதனால் சிகிச்சைக்காக லட்சுமணன் கடந்த 18-ந் தேதி அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகி காலில் புண் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில்  நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் லட்சுமணன் சிறுநீர் கழிப்பதற்காக அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் தனது காலில் கட்டப்பட்டு இருந்த துணியை அவிழ்த்து அதன் மூலம் ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனக்கு ஏற்பட்டிருந்த புற்று நோயை இனிமேல் சிகிச்சையால் காப்பாற்ற முடியாத என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கஜா புயலால் வாழைகள் சேதமடைந்ததால் மனவேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 33). இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் வாழைகள் பயிரிட்டிருந்தார். இந்தநிலையில் கஜா புயலால் அவர் பயிரிட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கடந்த 24-ந்தேதி வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யப்ப பக்தரான ரவி தற்போது சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×