search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erode by election"

    • இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
    • தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    திருச்சி:

    விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி டி.கரிகாலன்-தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் கொ.தங்கமணி இல்ல திருமண விழா இன்று திருச்சியில் நடந்தது.

    விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதன்முதலாக வேட்பாளரை தே.மு.தி.க. களம் இறக்கியது. அவரும் கழக உறுப்பினர்களுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மக்கள் மத்தியில் அவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

    அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தே.மு.தி.க.வின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும்.

    இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது.

    தே.மு.தி.க. பல தேர்தல்களை தனித்து களம் கண்டிருக்கிறது. எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார். தமிழகத்தில் பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று தெரியவில்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா? கூட்டணியா என்பதை அந்த நேரத்தில் அறிவிப்போம். தே.மு.தி.க.வுடன் ஒத்துப்போகும் பல கட்சிகள் இருக்கின்றன. ஆகவே தான் 2011-ல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும், உரிய நேரத்தில் விஜயகாந்த் அதனை அறிவிப்பார் என்றார்.

    முன்னதாக திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, மணமக்கள் தங்களது பெற்றோரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு விட்டுக் கொடுத்து 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். எனக்கும் கேப்டனுக்கும் சீர்திருத்த திருமணத்தினை கலைஞர் கருணாநிதி-மூப்பனார் ஆகியோர் நடத்தி வைத்தார்கள்.

    ஒட்டு மொத்த பேரும் நல்லவர் என கேப்டன் ஒருவரை மட்டுமே சொல்வதை இந்த உலகம் அறியும். கடவுள் அருளால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெறும். அந்த வெற்றியின் மூலம் மீண்டும் இயக்கம் விஸ்வரூப வெற்றியை அடையும் என்றார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் டிவி கணேஷ், சன்னாசிப்பட்டி பாரதிதாசன், குமார், பகுதி செயலாளர் என் எஸ் எம் மணிகண்டன், சாதிக் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
    • 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.

    மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார்.

    மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    • இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி.
    • இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ். ஓட்டு கேட்பாராம். ஆனால் வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டாராம்.

    சென்னை:

    சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுதந்திரமாக, ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். அங்கு தி.மு.க.வினர் தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டு வாடா தீவிரமாக செய்து வருகின்றனர்.

    தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சந்திக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் இடையூட்டு மனு தாக்கல் செய்து இரட்டை இலையை பெற்று இருக்கிறோம்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வின் பி. டீமாக செயல்பட்டு இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தார். அது முடியவில்லை. அ.தி.மு.க. தொண்டர்களின் கோவிலாக கருதப்படும் தலைமை கழகத்தை ஓ.பி.எஸ். காலால் மிதித்து கலங்கப்படுத்தினார். அவர் தி.மு.க.வை சார்ந்து இருக்கிறார். அதனால் தொண்டர்கள் அவரை ஏற்க மாட்டார்கள்.

    இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. அந்த அடிப்படையில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும்.

    இரட்டை இலைக்கு ஓ.பி.எஸ். ஓட்டு கேட்பாராம். ஆனால் வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்ல மாட்டாராம். இதிலும் அவர் முரண்பாடாக செயல்படுகிறார்.

    "ச்சீ... ச்சீ... இந்த பழம் புளிக்கும்" என்பது போல ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

    • அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
    • நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் கருதி கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

    இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
    • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில், கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வேட்டு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ. பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அங்கு, பொதுக்குழு உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டை, புகைப்படம் நகல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஷ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர் பங்கேற்றுள்ளனர். பொது வேட்பாளர் தேர்வு, தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    • ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மனு தாக்கல் குறித்தும் மாறுபட்ட தகவல் வெளியானது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், அ.தி.மு.க, ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    அ.தி.மு.கவின் எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு மனு தாக்கல் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மனு தாக்கல் குறித்தும் மாறுபட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    • ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்.
    • பாஜக நிலைப்பாடு குறித்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் கருத்தை இரு தலைவர்களிடம் எடுத்து கூறினோம்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட்டது.

    ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவின் ஆதரவை கோரினர். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    இதையடுத்து, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது:-

    தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராகவே உள்ளனர். திமுகவுக்கு எதிராகவே அதிமுக உருவானது. திமுகவை எதிர்க்க ஒருங்கிணைந்த அதிமுக, பாஜகவே தேவை.

    பாஜக நிலைப்பாடு குறித்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் கருத்தை இரு தலைவர்களிடம் எடுத்து கூறினோம்.

    ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம். ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்தால் தான் திமுகவை எதிர் கொள்ள முடியும்.

    ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 7ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈபிஎஸ், ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சந்தித்துள்ளார்.

    இந்த சந்திப்பின்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். சந்திப்பின்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஈபிஎஸ், ஓபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    அதிமுக தரப்பில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என இரு அணியினரையும் அண்ணாமலை சந்தித்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
    • வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் தேதி மாற்றம்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ஈ.பி.எஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டி.
    • கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

    தேர்தல் தொடர்பாக கடந்த 22ம் தேதி அன்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வருகிற 29-ந் தேதி அறிவிக்கப்படுகிறார் என்றும், ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. அதில் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம் என்றும் கூறினார்.

    இந்நிலையில், ஈரோடில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், கடுமையான உழைப்பை செலுத்தி மேனகாவை வெற்றி பெற பாடுபடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    • நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
    • தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ராமச்சந்திரன் மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக் கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதலமைச்சர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அதனை கூறி வாக்கு சேகரிப்போம். வரும் 3-ந் தேதி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளர் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தேர்தல் பிரச்சாரத்திற்காக நிச்சயமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகை தருவார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் தொடங்கி வைத்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிர்வாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×