search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை தொடங்கி வைத்த கலெக்டர்
    X

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தபோது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியை தொடங்கி வைத்த கலெக்டர்

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் தொடங்கி வைத்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிர்வாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×