search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee died"

    கருவடிக்குப்பத்தில் லாரி மோதியதில் சுமை தூக்கும் தொழிலாளி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன், (வயது55). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் புதுவையில் தங்கி சில நாட்கள் வேலைசெய்து விட்டு சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தினருக்கு கொடுக்க ஊருக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று காலை தனசேகரன் கருவடிக்குப்பத்தில் உள்ள குடோனில் லாரியில் வந்த டைல்ஸ் கற்களை இறக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் டிரைவர் பின்னோக்கி நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் தனசேகரன் தலை நசுங்கியது. உடனடியாக அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் தனசேகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தனசேகரன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர், தயாளன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்து போன தனசேகரனுக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியை வி‌ஷ வண்டுகள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது52). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள வன்னியராஜா கோவில் அருகே தனியார் தோட்டத்தில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி இவர் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.

    இதில் அப்பகுதியில் நின்ற மரத்தில் இருந்து வி‌ஷ வண்டு கூடு கீழே விழுந்தது. கூட்டில் இருந்த வி‌ஷ வண்டுகள் முருகேசனை சரமாரியாக கடித்தன. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் முருகேசன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது பற்றி திருச்செந்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான முருகேசனுக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

    வாடிப்பட்டியில் இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

    வாடிப்பட்டி:

    மதுரை செல்லூர் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது 33). இவர் சிம்மக்கல்லில் உள்ள பழக்கமி‌ஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று விருமாண்டி செல்லூர் அகிம் சாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வத்துடன் ஆந்திர மாநிலத்திற்கு மாம்பழங்கள் வாங்கச் சென்றார். அங்கு மாம்பழங்கள் வாங்கி விட்டு அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இன்று காலை 6.30 மணி அளவில் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் செல்வம், முன்னால் சென்ற லாரியை சரியாக கவனிக்க வில்லை. இதனால் வேக மாகச் சென்ற வேன் எதிர் பாராத விதமாக லாரியின் மீது மோதியது.

    இதில் வேனின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. விருமாண்டி இருக்கையிலேயே பிணமானார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீசார் விரைந்துச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள பூங்கங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் சுரேந்திரன் (வயது 25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை வேலை முடிந்த பிறகு சுரேந்திரன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக கப்பலூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேந்திரன் படுகாய மடைந்தார்.

    உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுரேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாரூர் அருகே போலீஸ் ஜீப் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் மானந்தங்குடியை சேர்ந்தவர் குமார்(வயது42). இவரது நண்பர்கள் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த அன்பழகன்(30), நெடுங்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(38). 3 பேரும் பிளம்பர்கள்.

    நேற்று 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது நன்னிலம் மதுவிலக்கு போலீசார் ஜீப்பில் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். போலீஸ்காரர் முருகன் ஜீப்பை ஓட்டி சென்றுள்ளார். பூந்தோட்டம் பகுதி பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது 3 பேர் மீதும் போலீசாரின் ஜீப் மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 2 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    விபத்து குறித்து குமாரின் அண்ணன் சங்கர், பேரளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுவை அருகே உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

    சேதராப்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரைபாக்கம் கிராமம் கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளி.

    இவர், நேற்று புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்கரையில் நடை பெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு (கரும காரியம்) மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ஆலங்குப்பம் என்ற இடத்தில் வந்த போது சாலையில் மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதையடுத்து மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரது மகனுக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து முருகனின் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தம்பாளையம்:

    பரமத்தி வட்டம் ஜமீன் இளம்பிள்ளை குடித்தெருவில் வசித்து வந்தவர் மாணிக்கம் (வயது 54). இவர் சோழசிராமணி மின்சார அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

    நேற்று சிறுபூலாம்பாளையம் குருவிக்கல்காடு என்ற இடத்தில் உள்ள உயர்அழுத்த மின்கம்பி அறுந்ததை சரிசெய்யும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவர் பணியாளர்களுடன் அப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஜமீன்இளம்பிள்ளை ஈ-நல்லாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அருகில் மின்கம்பத்தில் ஏறி மாணிக்கம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் இறந்தார். அவரது பிணம் மின்கம்பத்திலேயே தொங்கியபடி கிடந்தது. 

    இது குறித்து சோழசிராமணி மின்வாரிய உதவி பொறியாளர் சரவணகுமார் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே மொபட் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்கு மொபட்டில் அரியலூருக்கு வந்துள்ளார். ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கருப்பண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கமுதியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பமான சூழல் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதற்கிடையில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கலையரசு (வயது 32).

    கீழக்கொடுமலூரை சேர்ந்த வேங்கைமுத்து என்பவரின் மகனான கலையரசு, கருவேல மரங்கள் வெட்டியபோது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி இறந்த கலையரசுவிற்கு புஷ்பலதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    துக்க வீடு சென்று திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் (வயது 24). துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் ராஜபாளையம் வந்தார். பின்னர் மாலையில் அவர் ஊருக்கு புறப்பட்டார்.

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் கோவிலூர் அரசு விதைப் பண்ணை அருகே வந்த போது, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென திரும்பியுள்ளது.

    இதனை எதிர்பார்க்காத முருகன், தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது தந்தை மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோபி அருகே கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் தாலுகா அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.

    இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.

    இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×