என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி
    X

    புதுவை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி

    புதுவை அருகே உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த போது மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியானார்.

    சேதராப்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் சித்திரைபாக்கம் கிராமம் கன்னியகோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலித்தொழிலாளி.

    இவர், நேற்று புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்கரையில் நடை பெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு (கரும காரியம்) மகனுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    ஆலங்குப்பம் என்ற இடத்தில் வந்த போது சாலையில் மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதையடுத்து மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயம் அடைந்தார். அவரது மகனுக்கும் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து முருகனின் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×