search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமுதி"

    • மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
    • பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.

    பசும்பொன்:

    மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.

    இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.

    ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.

    இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    • கமுதி அருகே நத்தம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
    • வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி யில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்தவாரச்சந்தை கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கடைகள் கட்டப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வா கம் அதனை வியாபாரி களுக்கு வழங்குவதில் பார பட்சம் காட்டியதாக தெரிகி றது. மேலும் கடைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்ட ணத்தைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    ஒப்பந்ததாரர்கள் வியாபாரிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக கலெக்டர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பல்வேறு இன்னல்கள் கார ணமாக அபிராமம் பகுதியில் வாரச்சந்தை நடத்துவதில் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதன் காரண மாக அபிராமம் அருகே உள்ள நத்தம் ஊராட் சிக்குட்பட்ட அபிராமம்-மதுரை சாலையில் வாரச் சந்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்கு நத்தம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர்க ளின் ஆதரவோடு தீர்மான மும் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ மையும் நத்தம் ஊராட்சியில் வாரச்சந்தை நடைபெறும் என ஊராட்சி மன்ற தலை வர் போத்தி தெரிவித்து உள்ளார்.

    அபிராமம் பேரூராட்சி யில் வாரச்சந்தை நிறுத்தப் பட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

    • கமுதியில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் மகளிர் உரிமை தொகை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கமுதி ஊராட்சி ஒன்றியம், தலை வநாயக்கன்பட்டியில் மகளிர் உரிமை தொகைக் கான சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கிராம பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம பொது மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழராமநதி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமையில் சிறப்பு கிராம சபைகூட்டம் நடைபெற்றது. ஊர் நல அலுவலர் (மகளிர் திட்டம்) ராசாத்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மைதீன் ஊராட்சி செயலர் முத்து ராமு மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் ஆனையூர், பாக்குவெட்டி, பொந்தம்புளி, பெருநாழி, திம்மநாதபுரம், பேரையூர், காத்தனேந்தல், உட்பட ஏராளமான ஊராட்சிகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • கமுதி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.

    இளநிலை உதவி யாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் ராஜேசுவரி கதிரேசன், ஊராட்சி செயலாளர் வேல் முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி முழுவதும் கூடுதல் மின்விளக்கு அமைத்தல், கருங்குளம் மயானத்திற்கு எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், தடுப்புச்சுவர் அமைத்தல், புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பது குறித்தும், பாக்குவெட்டி, கருங்குளம் கிராமத்தில் மயானச்சாலை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இதேபோல் ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக கணக்காளர் தெய்வ மணிகண்டன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் ராஜா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், அனைவருக்கும் வீடு திட்ட கணக்கெடுப்பு ஒப்புதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கீழராமநதி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் முத்துமாரி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    தூய்மையான கிராமம் உறுதிமொழி எடுத்தல், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கே.நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி செயலர் முகம்மது ஹக்கீம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • திருமங்கலம், உசிலம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.
    • வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருமங்கலம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்து முக்கிய நிகழ்ச்சியான குருத்தோலை பவனி இன்று நடந்தது. திருமங்கலம் அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்த னையுடன் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு பவனியில் பங்கு தந்தை யர்கள், போதகர்கள் மற்றும் சபைகளின் நிர்வாகிகள் முன்னிலையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடியபடி திருமங்கலம் நகரில் பவனியாக சென்ற னர். பின்னர் தங்களது தேவாலயங்களுக்கு சென்று குருத்தோலை ஞாயிறு தொடர்பான சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.


    உசிலம்பட்டியில் நடந்த குருத்தோலை பவனி.

    உசிலம்பட்டியில் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம் நடத்தினர். ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

    ஆர்.சி. தேவாலய பங்கு தந்தை ஜெய் ஜோசப், டி.இ.எல்.சி. சபைகுரு சார்லஸ் ஐசக் ராஜ், சி.எஸ்.ஐ. போதகர் ஜான்சன் கார்டார் மற்றும் சபையினர், கிறிஸ்தவர்கள் குருத் தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.


    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குருத்தோலை பவனி நடந்தது. 

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் தேவா லயத்தில் குருத்தோலை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    கிறிஸ்தவர்கள் தேவால யத்தில் ஒன்றுகூடி குருத்தோ லைகளை கைகளில் ஏந்திய படி ஓசன்னா பாடல்கள் பாடி கிராமத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊர்வலத்திற்கு சபைகுரு அருள்தன ராஜ் தலைமை தாங்கினார். உதவிக்குரு ஜெபராஜ் எபினேசர் மற்றும் சபை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


    கமுதியில் குருத்தோலை பவனி நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கிறிஸ்துவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். சவேரியார் தெரு, அந்தோணியார் தெருவில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், கருவாட்டு பேட்டை பகுதியில் இருந்து குருத் தோலைகளை ஏந்தி பவனி வந்தனர். பின்னர் புனித அந்தோணியார் ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில், அனைவரும் கலந்து கொண்டனர். வருகிற 7-ந் தேதி புனித வெள்ளி யாகவும், 9-ந் தேதி ஈஸ்டர் நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

    கமுதியில் நேற்று கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பமான சூழல் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    இதற்கிடையில் மின்னல் தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர் கலையரசு (வயது 32).

    கீழக்கொடுமலூரை சேர்ந்த வேங்கைமுத்து என்பவரின் மகனான கலையரசு, கருவேல மரங்கள் வெட்டியபோது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். மின்னல் தாக்கி இறந்த கலையரசுவிற்கு புஷ்பலதா என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    ×