என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரச்சந்தை"

    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.
    • வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்படும். இந்த வார சந்தைக்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறி பயிர் வகைகள் கொண்டுவந்து விற்பனை செய்வார்கள். வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான காய்கறி மளிகை சாமான்கள் வாங்கி செல்வார்கள்.

    கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாயிகள் அதிக அளவில் விற்பனைக்கு விளை பொருட்களை கொண்டு வரவில்லை. காய்கறிகளை விவசாயிகளிடம் வாங்கி விற்கும் வியாபாரிகளும் அதிக அளவில் வரவில்லை. இதனால் வார சந்தையில் வியாபாரம் குறைவாகவே காணப்பட்டது.

    • அபிராமம் வாரச் சந்தையில் எடை மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு உட்பட்ட காடனேரி, நத்தம், அச்சங்குளம், அகத்தாரிருப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அபிராமத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

    இங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வியாபாரிகள் தராசில் இரும்பு எடை கற்களால் எடை போடுகின்றனர். இதில் எடை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறிகளை அள்ளி போட்டு ஒரு பக்க தராசு தட்டு தரையை தொடும் அளவிற்கு செய்கின்றனர்.வீட்டில் எடை போட்டால் குறைகிறது.

    எங்களை வியாபாரிகள் நூதன முறையில் ஏமாற்றுகின்றனர். வசதி உள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்கள். நாங்களோ நம்பி இருப்பது வாரச்சந்தையை தான். சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்துபவர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்திரையிட்டு அனுமதி பெற வேண்டும்.

    இதை பெரும்பாலான விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

    அதன்படி இன்று நடைபெற்ற இந்த சந்தைக்கு ஆசனூர், குன்னத்தூர், எறையூர், கிளியூர், பாதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    வருகின்ற 15-ந் தேதி தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வார சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் பல பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து இருந்தனர்.

    ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது சந்தை தொடங்கி 2 மணி நேரத்திலேயே ரூ. 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர்.
    • ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின.

    விழுப்புரம்: 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பழமைவாய்ந்த வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் வேலூர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடு வளர்ப்பவர்கள் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் வாகனத்தில் செஞ்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து ஏராளமான வியாபாரிகளும் செஞ்சி சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கினர். ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின. சுமார் 10 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

    மேலும், செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்ச லுக்காக மலையும் காடுகளும் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வள ர்க்கப்படும்ஆ டுகளின் கறி சுவையாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து ஆடுகைளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மாடுகள், கோழிகள்ஆகியவைகள் விற்பனையாகின. மாட்டுப் பொங்கலுக்கு கால் நடைகளுக்கு தேவையான கழுத்தில் கட்டும் கயிறுகள், கால்நடைகளுக்கு கட்டப்படும் சலங்கைகளை கால்நடை வளர்ப்பவர்கள் காலையிலேயே வாங்கி சென்றனர்.

    • வாரச்சந்தையை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை உடன்குடி மெயின் பஜாரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திங்கட்கிழமை தோறும் செயல்படும் இந்த சந்தையில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வருவார்கள்.

    சுற்றுபுறபகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை முதல் இரவு வரை வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வார்கள்.

    இந்த வாரச்சந்தையை நவீனமாடலில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று இங்கு வரும் வியாபாரி களும், பொதுமக்களும், கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஏற்பாட்டில் ரூ1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க விழாவும்நடந்தது.

    தற்போது கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணியை உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி தொடங்கப்பட்டது. இப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இப்பணியை விரைவில் முடித்து திறப்பு விழாநடத்த வேண்டும் என்று அமைச்சரும், பேரூராட்சி நிர்வாகமும் மிகுந்தஆவலாய் உள்ளது.

    எனவே இப்பணி விரை வில் முடியும் என்றார். அப்போது, கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், சரஸ்வதி பங்காளர், பிரதீப் கண்ணன், ராஜேந்தி ரன், முத்துசந்திராசிவா, அன்புராணி, சரஸ்வதி மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி ஊழி யர்கள் உடன் சென்றனர்.

    • அபிராமம் வாரச்சந்தையில் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடை மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதி மற்றும் வாரச் சந்தையில் எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசு களில் முறைகேடு செய்து எடை குறைவாக பொருட்கள் விற்பனை நடைபெறு வதாக புகார் எழுந்துள்ளது.

    மளிகை, காய்கறி, பழக் கடை உள்பட அனைத்து கடைகளிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்கள் எடைபோட எடைக்கற்கள் பயன்படுத்தப் பட்டது. எடைகற்கள் சரியான எடையில் இருக்கி றதா? என ஆய்வு செய்து முத்திரை யிடப்பட்டு வந்தது.

    நாளடைவில் பெரும்பா லான கடைகளில் எடைகற்க ளில் முத்திரை இல்லாமல் பயன்படுத்த தொடங்கினர். மேலும் எடைக்கற்கள் தேய்ந்து விடுவதால் கிலோவிற்கு 150 கிராம் முதல் 200 கிராம் எடை வரை குறைவாகி விடுவதும் உண்டு. இதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக் தராசு மூலம் எடை போடும் முறை பயன்பாட்டுக்கு வந்தது.

    எலக்ட்ரானிக் தராசில் பொருட்களை வைத்ததும் அதன் எடை குறியீடு டிஜிட்டல் முறையில் தெரியும். இதனால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான எடை இருப்பதாக நம்பி வாங்கி செல்லும் நிலை உள்ளது. சமீப காலமாக வியாபாரிகள் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடையை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அபிராமம் பேருராட்சியில் சுற்றியுள்ள 90-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மேல் இருப்பதால் இங்கு வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை வாரச்சந்தை நடபெறுகிறது. இதேபோல வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தினங்களில் சந்தை நடைபெறும். இந்த சந்தைகளில் காய்கறி, பழங்கள், மீன், தானிய வகைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    வாரச்சந்தைகளில் வாங்கும் பொருட்களுக்கு தராசில் உள்ள டிஜிட்டல் அளவு சரியாக காட்டி னாலும், 200 கிராம் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    எடை குறைவாக இருக்கும் வகையில் எலக்ட் ரானினிக் தராசுகளில் வியாபாரிகள் மோசடி செய்துள்ளனர். எடை கற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டிற்கான முத்திரை யிடப்படுவதில்லை.

    இதுபோன்ற தவறுகள் வாரச்சந்தைகளில் தான் அதிகமாக நடந்துவருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அபிரா மத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், வாரச்சந்தை கடைகளில் 1 கிலோ பொருட்கள் வாங்கிய தில் மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் அடைந்தேன். அதை வேறு இடத்தில் எடை போடும்போது ஒரு கிலோவிற்கு 150 கிராம் குறைவாக இருந்தது.

    வாரச்சந்தை கடைகளில் உள்ள கடைகளில் வாங்கும் பொருட்கள் எடை குறைவாக உள்ளன. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விலை குறைவாக விற்பதாக கூறி எடையை குறைத்து விடு கின்றனர். எலக்ட்ரானிக் தராசுகளில் இதுபோல் முறைகேடு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. அபிராமம் பகுதியில் வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், தராசுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.
    • கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    அதன்படி நேற்று வெள்ளகோவில் வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20-க்கும் விற்கப்பட்–டது

    இதேபோல் பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், மேரக்காய் ரூ.40-க்கும், கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
    • பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.120, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். 

    • முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
    • தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில் திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டு வரு கிறது. சிவகங்கை, ராமநாத புரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் பல வகை காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த வார சந்தை யில் தேவகோட்டை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி பழம் மீன் மற்றும் அத்தியாவசிய பொருட் களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வார சந்தையில் வாங்கும் பொருட்கள் எடை மிகுந்த குறைந்த அளவில் உள்ளது. அதனை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டிய அவல ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வாங்கும் பொருட்கள் 800 கிராம் முதல் 900 கிராம் வரை மட்டுமே உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×