search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி வாரச்சந்தை கட்டும் பணி விரைவில் முடியும் - பேரூராட்சி தலைவி தகவல்
    X

    உடன்குடி வாரச்சந்தை கட்டும் பணியை பேரூராட்சி தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி மற்றும் கவுன்சிலர்கள் நேரில் ஆய்வு செய்த காட்சி.

    உடன்குடி வாரச்சந்தை கட்டும் பணி விரைவில் முடியும் - பேரூராட்சி தலைவி தகவல்

    • வாரச்சந்தையை புதுப்பித்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை உடன்குடி மெயின் பஜாரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. திங்கட்கிழமை தோறும் செயல்படும் இந்த சந்தையில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வருவார்கள்.

    சுற்றுபுறபகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை முதல் இரவு வரை வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வார்கள்.

    இந்த வாரச்சந்தையை நவீனமாடலில் புதுப்பித்து கட்ட வேண்டும் என்று இங்கு வரும் வியாபாரி களும், பொதுமக்களும், கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஏற்பாட்டில் ரூ1.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடக்க விழாவும்நடந்தது.

    தற்போது கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. இப்பணியை உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவி ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி தொடங்கப்பட்டது. இப்பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இப்பணியை விரைவில் முடித்து திறப்பு விழாநடத்த வேண்டும் என்று அமைச்சரும், பேரூராட்சி நிர்வாகமும் மிகுந்தஆவலாய் உள்ளது.

    எனவே இப்பணி விரை வில் முடியும் என்றார். அப்போது, கவுன்சிலர்கள் முகம்மது ஆபித், சரஸ்வதி பங்காளர், பிரதீப் கண்ணன், ராஜேந்தி ரன், முத்துசந்திராசிவா, அன்புராணி, சரஸ்வதி மற்றும் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி ஊழி யர்கள் உடன் சென்றனர்.

    Next Story
    ×