search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "small onions"

    • இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது.
    • சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.

    உடுமலை:

    சின்ன வெங்காய ஏற்றுமதி முடங்கி கிடப்பதைத் தவிா்க்க அதற்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் ஆா். பி. சாமி கூறியதாவது:-

    இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16 ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன் விலை ஏற்றத் தாழ்வு என்பது இந்திய அளவிலான பிரச்னையாகும்.

    ஆனால் சின்ன வெங்காயம் என்பது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து, ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை விதித்தும் தமிழ்நாட்டு சின்ன வெங்காய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும் போது கொடுக்கப்படும் குறியீட்டு எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டுக்கும் ஒரே எண்ணாக இருந்து வருகிறது. சின்ன வெங்காயத்துக்கு தனி ஏற்றுமதி குறியீட்டு எண் உருவாக்க வேண்டுமென்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச உற்பத்திச் செலவு 30 ரூபாயாகும். விவசாயிகள் கிலோ ரூ. 45க்கு விற்றால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய ஏற்றுமதி வரி விதிப்பு கிலோவுக்கு 20 ரூபாயைக் குறைத்துள்ளது.

    சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய எவ்வித மானியமும், சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை. நஷ்டத்துக்கு நிவாரணமும் இல்லை. அப்படியிருக்க வரி விதிக்க எவ்வித தாா்மீக உரிமையும் கிடையாது. கஷ்டப்படும் விவசாயிகளைக் கண்டு கொள்ளாமல், நுகா்வோரை மட்டுமே அரசு கருத்தில் கொள்கிறது.

    ஏற்றுமதி தரத்தில் சந்தை நிலவரத்தை அனுசரித்து கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனா்.

    எனவே, வரி விதிப்பை ரத்து செய்வதுடன், சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி குறியீட்டு எண்ணையும் விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.

    • வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
    • தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில் திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
    • சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

     பல்லடம் : 

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமன்றி நல்ல தரமான சின்ன வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு ஏற்ற தட்பவெப்பநிலை நல்ல விளைச்சலை கொடுத்து வருகிறது. ஆரம்ப காலங்களில் நாட்டு ரகங்களை சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது உயர்ரக சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    அனைத்து சமையலுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுத்தப்படுவதால் எப்போதும் அதற்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. எனவே விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறார்கள்.

    கடந்த காலங்களில் விலை குறைவாக இருந்த சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ரூ.50 லிருந்து ரூ.80 வரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். நல்ல தரமான சின்ன வெங்காயம் கூடுதல் விலைக்கு வாங்கப்படுகிறது.

    மேலும் விலை குறைவான சமயங்களில் விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்து விலை ஏறுகிறபோது சின்ன வெங்காயத்தை விற்பனை செய்தும் வருகிறார்கள். பல்லடம் பகுதியில் தற்போது தான் நடவு பணிகள் தொடங்க உள்ளது.

    எனவே வெளி மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    எனவே மழை இல்லாமல் இருந்தால் அடுத்து வரக்கூடிய நாட்களில் ராசிபுரம், நாமக்கல் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு தயாரான நிலையில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அவ்வாறு வரும் பட்சத்தில் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தற்போதைக்கு சின்ன வெங்காயம் உரிய விலைக்கு விற்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது.
    • பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

    திருப்பூர் : 

    மார்கழி மாதம் தொடங்கி உள்ள நிலையில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்பதால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சின்ன வெங்காய நடவு பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

    அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது. பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

    வியாபாரிகள் சராசரியாக கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விலையில் முதல் தரம் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கலூர் ஒன்றியம் மருதுரையான் வலசை சேர்ந்த வெங்காய வியாபாரி ரவி கூறுகையில், புதிய வெங்காயம் வர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. புதிய காய்கள் பொங்கலுக்கு பின் வர துவங்கும். அதன் பின் விலை படிப்படியாக குறையும் என்றார்.

    விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட துவங்கி உள்ளனர்.கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
    பல்லடம்:

    பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது .  இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள்,வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

    வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டு தோறும் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த சீசனில் சாகுபடி செய்யப்படும் வெங்காயத்தை இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் விளைச்சல் இல்லாத போது நல்ல விலை கிடைக்கும். இந்த ஆண்டு வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. 

    இந்த நிலையில் விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஈடுபட துவங்கி உள்ளனர். கடந்த கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்கவில்லை.  

    எனவே இந்த சீசனில் சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனை ஆகும் என்ற நம்பிக்கையில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ×