என் மலர்tooltip icon

    செய்திகள்

    கப்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதி தொழிலாளி பலி
    X

    கப்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதி தொழிலாளி பலி

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள பூங்கங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் சுரேந்திரன் (வயது 25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை வேலை முடிந்த பிறகு சுரேந்திரன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக கப்பலூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு 4 வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேந்திரன் படுகாய மடைந்தார்.

    உடனே அப்பகுதியினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுரேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×