search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi"

    எடப்பாடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள செட்டிப்பொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாப்பாத்தி வழக்கம் போல் தூங்க சென்றார். பின்னர் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ராதாகிருஷ்ணன் ஜன்னல் வழியாக பார்த்த போது பாப்பாத்தி தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து மனைவி உடலை பார்த்து ராதாகிருஷ்ணன் கதறி அழுதார். உடனே அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உடலை மீட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் பாப்பாத்தி உடலை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-



    டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினரே அல்ல. கட்சியின் விதிமுறைகளுக்கு மாறாக அவருக்கு அவசர அவசரமாக உறுப்பினர் அட்டையும், துணை பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக கட்சியில் பிரிவினைகளை உருவாக்கி வந்தார். கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். அதனால் கட்சி விதிமுறைகளின் அடிப்படையில் அவரை பதவிநீக்கம் செய்ய அனைத்து அதிகாரமும் கட்சிக்கு உண்டு.

    அவர் பிரிவினைவாதியாக செயல்பட்டது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சிக்கு எதிராக புதிய கட்சியையும் தொடங்கி இருக்கிறார். ஒருவர் அடிப்படை உறுப்பினரே அல்லாத போது அவர் எப்படி கட்சிக்கும், கட்சியின் சின்னத்துக்கும் உரிமை கொண்டாட முடியும்?

    கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தின் மீது உரிமை கொண்டாட டி.டி.வி.தினகரனுக்கும், அவரை சேர்ந்தவர்களுக்கும் எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர், கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் கமிஷன் விதிமுறைகள், அ.தி.மு.க. கட்சியின் விதிமுறைகள், கட்சி பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை கோர்ட்டில் வாசித்துக் காட்டினார்.

    அவற்றை கேட்டறிந்த நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக கூறினர். 
    எடப்பாடி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்ததால் வி‌ஷ விதையை தின்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெடிக்காரண்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவருக்கு காவியா(25), விஜயா(20) என இரு மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணம் முடித்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் மனைவியை பிரிந்து பழனிசாமி தனியாக வாழந்து வந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பழனிசாமி நேற்று அரளி  விதைகளை அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாந்தி ஏற்பட்டு மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி நேற்றிரவு உயிரிழந்தார். பழனிசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூலாம்பட்டி போலீசார் அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். #Tamilnews
    நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.



    அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார்.
    கோவை:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918-ம் ஆண்டு ஹமில்டன் என்ற போலீஸ் அதிகாரி ஹமில்டன் கிளப்பை கட்டினார். பின்னர் 1951-ம் ஆண்டு தமிழக போலீசிடம் இந்த கட்டிடம் கொடுக்கப்பட்டது.

    இதில் உள்ள 18 அறைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கி இருந்தனர். இந்தநிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். அப்போதைய மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த அமல்ராஜ் இந்த கட்டிடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அதில் போலீஸ் மியூசியம் அமைக்க திட்டமிட்டார். இதனையடுத்து இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் மியூசியமாக மாற்றப்பட்டது.

    இங்கு கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன் படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், துப்பாக்கி தயாரிக்கும் எந்திரம், 1958-ம் ஆண்டு கோவையை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம், சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், மலையூர் மம்மட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணைகள், வெடிகுண்டு நிபுணர்கள் பயன்படுத்தும் உடைகள், கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (17-ந் தேதி) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    ×