search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி"

    • ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
    • தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    • எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
    • மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது.

    • வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப்போம்.
    • அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜெய லலிதா ஆகியோர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின்பு துரோகிகள், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.வை எடப்பா டியார் மீட்டெடுத்தார்.

    தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் வீதம் இரண்டரை கோடி உறுப்பி னர்களை உருவாக்கி தி.மு.க.விற்கு சிம்ம சொப்ப னமாக எடப்பாடியார் உள்ளார் .

    தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் பூத்துகளில் இளைஞர்கள், பெண்களை நியமித்துள் ளார். தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி உள்ளது.தமிழகத்தை எடப்பா டியரால் மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமல்ல ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிகொடுக்கப் பட்டு இருக்கிறது. தன் குடும்பத்தை மட்டும் வாழ வைக்க மன்னராட்சி போல் செயல்படும் தீய சக்தியிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். வீழ்ந்து கிடக்கும் தமிழக த்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப் போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தவசி, பா.நீதிபதி, கே.தமிழரசன், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல்,மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், தமிழ்ச்செல்வன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, ராமையா, பிரபுசங்கர், கண்ணன் நகர செயலாளர்கள் விஜயன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி செல்லம்பட்டி ரகு, மகேந்திர பாண்டி, ஆர்யா சிங்கராஜ பாண்டியன், துரைப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராமகிருஷ்ணன், சேர்மன் லதா ஜெகன், டாக்டர் விஜய பாண்டியன், வக்கீல் முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.

    இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் முன்னாள் பகுதி செயலாளரும் அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி முன்னிலையில் அ.தி.மு.க. வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுப்பட்டி முத்துமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, மாணவரணி துணை செயலாளர் ராஜாராமன், நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகேந்திரன், வட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கே.எஸ்.தென்னரசுக்கு வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
    • 21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள் என்று எடப்பாடி கூறினார்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.

    அவர் பேசியதாவது, "21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள்" என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


    இயக்குனர் நவீன்

    அப்போது "நீ சரியான ஆம்பளையாக இருந்தால். மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு சந்தித்து வாக்கு சேகரியுங்கள்" என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'மூடர் கூடம்', 'கொளஞ்சி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஒளிமயமான ‘ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன.
    • இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    வேதாரண்யம்:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வேதாரண்யம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர் .

    அதில் ஒளிமயமான 'ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன. இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைவாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஆத்தூர்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தை முடித்து விட்டு இன்று தனது சொந்த ஊரான சேலத்திற்கு கார் மூலம் வந்தார்.

    சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு டோல்கேட் அருகே அவருக்கு அ.தி.மு.க.வினர் கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தலைவாசல் ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மோகன், கெங்கவல்லி ராஜா, ரமேஷ், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×