என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
வேதாரண்யத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்
- ஒளிமயமான ‘ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன.
- இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வேதாரண்யம்:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வேதாரண்யம் வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள்தலைவர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர் .
அதில் ஒளிமயமான 'ஒற்றை தலைமையே , தலைமை ஏற்க வாருங்கள், என வாசகங்கள் அடங்கி உள்ளன. இந்த போஸ்டர் தற்போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






