search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செல்லும்-தஞ்சையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க.வினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செல்லும்-தஞ்சையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.

    இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை ரயில் நிலையம் முன்பு முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் முன்னாள் பகுதி செயலாளரும் அச்சகத் தலைவருமான புண்ணியமூர்த்தி முன்னிலையில் அ.தி.மு.க. வினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஏழுப்பட்டி முத்துமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தெட்சிணாமூர்த்தி, காந்திமதி, மாணவரணி துணை செயலாளர் ராஜாராமன், நீலகிரி ஊராட்சி அ.தி.மு.க பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் மகேந்திரன், வட்டப் பிரதிநிதி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×