வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப்போம்

வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப்போம். அ.தி.மு.க. 52- வது ஆண்டு தொடக்க விழாவில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
Published on

மதுரை

அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜெய லலிதா ஆகியோர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாவின் மறைவுக்கு பின்பு துரோகிகள், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க.வை எடப்பா டியார் மீட்டெடுத்தார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் வீதம் இரண்டரை கோடி உறுப்பி னர்களை உருவாக்கி தி.மு.க.விற்கு சிம்ம சொப்ப னமாக எடப்பாடியார் உள்ளார் .

தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் பூத்துகளில் இளைஞர்கள், பெண்களை நியமித்துள் ளார். தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கி உள்ளது.தமிழகத்தை எடப்பா டியரால் மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமல்ல ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிகொடுக்கப் பட்டு இருக்கிறது. தன் குடும்பத்தை மட்டும் வாழ வைக்க மன்னராட்சி போல் செயல்படும் தீய சக்தியிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். வீழ்ந்து கிடக்கும் தமிழக த்தை எடப்பாடியார் தலைமையில் மீட்டெடுப் போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.தவசி, பா.நீதிபதி, கே.தமிழரசன், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், எம்.வி.கருப்பையா, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல்,மாவட்ட கழக நிர்வாகிகள் சி.முருகன், தமிழ்ச்செல்வன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, ராமையா, பிரபுசங்கர், கண்ணன் நகர செயலாளர்கள் விஜயன், சுமதி சாமிநாதன், மாவட்ட அணி செல்லம்பட்டி ரகு, மகேந்திர பாண்டி, ஆர்யா சிங்கராஜ பாண்டியன், துரைப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ராமகிருஷ்ணன், சேர்மன் லதா ஜெகன், டாக்டர் விஜய பாண்டியன், வக்கீல் முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com