தலைவாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

தலைவாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில்  வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
எடப்பாடி பழனிசாமிக்கு கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
Published on

ஆத்தூர்:

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தை முடித்து விட்டு இன்று தனது சொந்த ஊரான சேலத்திற்கு கார் மூலம் வந்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு டோல்கேட் அருகே அவருக்கு அ.தி.மு.க.வினர் கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தலைவாசல் ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மோகன், கெங்கவல்லி ராஜா, ரமேஷ், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com