search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police museum"

    இந்தியாவில் முதல் முறையாக தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #policemuseum
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம் டெல்லியின் அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தேசிய போலீஸ் நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் போலீசின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.

    இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் போலீஸ் நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது காவல் துறை குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். #policemuseum

    கோவையில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார்.
    கோவை:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1918-ம் ஆண்டு ஹமில்டன் என்ற போலீஸ் அதிகாரி ஹமில்டன் கிளப்பை கட்டினார். பின்னர் 1951-ம் ஆண்டு தமிழக போலீசிடம் இந்த கட்டிடம் கொடுக்கப்பட்டது.

    இதில் உள்ள 18 அறைகளில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தங்கி இருந்தனர். இந்தநிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் இதனை இடித்து அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். அப்போதைய மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த அமல்ராஜ் இந்த கட்டிடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து அதில் போலீஸ் மியூசியம் அமைக்க திட்டமிட்டார். இதனையடுத்து இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு போலீஸ் மியூசியமாக மாற்றப்பட்டது.

    இங்கு கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன் படுத்திய பீரங்கிகள், விடுதலை புலிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், துப்பாக்கி தயாரிக்கும் எந்திரம், 1958-ம் ஆண்டு கோவையை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு அடிக்கும் எந்திரம், சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், மலையூர் மம்மட்டியானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், ராணுவ ஏவுகணைகள், வெடிகுண்டு நிபுணர்கள் பயன்படுத்தும் உடைகள், கண்டுபிடிக்கும் கருவிகள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (17-ந் தேதி) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    ×