search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dogs"

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    • நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.

    வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

    • தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கோபால் எச்சரிக்கை
    • பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான கோபால் நகராட்சி ஆணையர் சிவக்குமாரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புதுவை மாவட்டத்தின் மையப் பகுதியான உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது.

    குறிப்பாக இந்திராகாந்தி நகர், சாந்தி நகர், உருளையன்பேட்டை, குபேர் நகர், கென்னடி நகர், கோவிந்தசாலை உள்ளிட்ட தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களால் நடந்து செல்லும் முதியவர்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

    அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் விரட்டுவதும், அதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. தெருநாய்களின் தொல்லையால் மேற்கண்ட பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது. மேலும், வருகின்ற மாதம் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் குழந்தைகள், மாணவர்கள் தெருக்களில் விளையாட முடியாத நிலை ஏற்படும்.

    அதுபோல், நாய்கடித்தவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவனைக்கு சென்றால் போதிய விஷக்கடி மருந்தும் சரிவர இல்லை என்ற நிலையும் இருக்கிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் தங்களிடம் புகார் கடிதம் அளித்தோம்.

    கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட தெரு நாய்களின் பிரச்சனை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசும் மாநிலம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது என்றும் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மற்றும் கால்நடைத்துறை இணைந்து தெரு நாய்களை பிடிக்க நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

    ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆகவே, நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் இன்று நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. மாவட்டத்திலேயே முதன் முறையாக நடந்த நாய்கள் கண்காட்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அமைப்பில் நாய்களை நிறுத்தி வைத்திருந்தனர். அருகிலே அதற்கு தேவையான தண்ணீர், உணவு பொருட்களும் இருந்தது.

    கண்காட்சியில் இடம்–பெற்று இருந்த ஒவ்வொரு நாய்களையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். நாய்கள் பராமரிக்கப்படும் விதம், உணவு முறைகள் குறித்து அதன் உரிமையாளர்களிடம் கேட்டு அறிந்தார்.

    மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள், நாய்கள் உண்ணும் உணவுப்–பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து போலீசாரின் நாய்கள் அணிவகுப்பு கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது. தொடர்ந்து கண்காட்சி நடந்து வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து இன்று மாலை நாய்கள் கண்காட்சி நடைபெறும். இதில் நாய்களின் அணிவகுப்பு, நடை உள்ளிட்ட பலவற்றை நாய்கள் நிகழ்த்தி காட்டும். மேலும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டும். சிறந்த நாய் வகைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.

    • வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
    • சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள நாச்சிகுளம் நகரின் முக்கிய பகுதியாகும்.

    இங்குள்ள தெருக்களில் சமீப காலாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்கள், கடைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.

    அதேபோல், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
    • நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குட்பட்ட வாா்டு எண் 11, 13, 14 ஆகிய வாா்டுகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் என பலரையும் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.

    தெருநாய்கள் தொல்லை தொடா்பாக புகாா் அளிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. ஆகவே தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்க்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
    • கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.
    • சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்கு உட்பட்ட பாளை, தச்சநல்லூர், நெல்லை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதியிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    நாய்கள் தொல்லை

    அதன்பேரில் மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சந்திப்பு பஸ்நிலைய பகுதி மற்றும் ரெயில் நிலையத்தில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிவதால் பயணி கள் அச்சத்துடன் செல்வதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்னர்.

    மாநகராட்சி நடவடிக்கை

    அதைேயற்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின் பேரில், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் சாகுல் அமீது, சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் சந்திப்பு பஸ் நிலையம் பகுதிகள், ெரயில் நிலைய போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த 23 நாய்களை வலை விரித்து பிடித்தனர்.

    இந்த பணியானது மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.
    • 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் 19-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நளினி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து இருந்தார். பின்னர் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது 2 பெரிய ஆடுகள், 5 குட்டி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது.

    நள்ளிரவுநேரம் பட்டிக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 2 பெரியஆடுகள், 5 குட்டி ஆடுகள் செத்து விட்டன. இதுகுறித்து கால்நடை டாக்டரகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பட்டிக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவாயிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் பல்வேறு தொல்லைகள் அதிகரிக்கிறது. பயிர்களை மயில்கள், மான்கள் ஒரு பக்கம் சேதம் ஏற்படுத்தினாலும், தோட்டத்தில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலையில், வாழ்வாதாரமாக விளக்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொல்வது கவலை அளிக்கிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து சாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருப்பத்தூரில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நெற்குப்பை

    உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சிவகங்கை மண்டலம் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

    முகாமில் திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் ராமச்சந்திரன் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினார். முகாமில் கால்நடை மருத்துவமனை முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகானந்தம், அக்பர் அலி, முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பேரூர் ரோட்டில் நாய்களை தேடி சென்றார்.

    கோவை -

    கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 47). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

    அவர் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட நெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து பார்த்து வருகிறார். அதனால் நெரு நாய்கள் எந்த நேரமும் அவரை சுற்றி வரும். நேற்று வழக்கம் போல நாய்களுக்கு உணவளிக்க பாபுராஜ் சென்றார்.

    வெகு நேரமாக அவர் உணவுடன் நாய்களுக்காக காத்திருந்தார். ஆனால் ஒரு சில நாய்கள் மட்டுமே வந்தது. மற்ற நாய்கள் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் நாகராஜபுரத்தில் இருந்து பேரூர் ரோட்டில் நாய்களை தேடி நடந்து சென்றார்.

    அப்போது அங்கங்கே அவர் வளர்த்து வந்த 5 நாய்கள் இறந்த கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களின் அருகே சென்று பார்த்தார். அதில் மர்ம நபர்கள் யாரோ நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாபுராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாத்தான்குளம் நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. காலை, மாலை நேரங்களில் மெயின் பஜார் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
    • இதில் ஒரு நாய்க்கு கேன்சர் கட்டி உள்ளது. இந்த நாய் காலின் கீழே கேன்சர் கட்டியோடு மற்ற நாய்களோடு நகர் முழுவதும் சுற்றி திரிகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. காலை, மாலை நேரங்களில் மெயின் பஜார் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    இதில் ஒரு நாய்க்கு கேன்சர் கட்டி உள்ளது. இந்த நாய் காலின் கீழே கேன்சர் கட்டியோடு மற்ற நாய்களோடு நகர் முழுவதும் சுற்றி திரிகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சாத்தான் குளம் நகர வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ் மதுரம், சாத்தான்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோருக்கு இந்த தெருநாய்கள் பிரச்சனையை கொண்டு சென்று கேன்சர் கட்டியுடன் சுற்றி தெரியும் இந்த தெருநாயை பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
    • பள்ளிவாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. பொது–மக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தெரு நாய்கள் முத்துப்பேட்டை தெற்குதெரு அரபு சாஹீப் பள்ளி வாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பலியாகியது. இதனைக்கண்ட எஸ்டி.பி.ஐ கட்சியினர் நகர தலைவர் பகுருதீன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அப்பகு–தியினர் ஆடுகளை எடுத்து சென்று பேரூராட்சி வாசலில் அடுக்கி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் பேரூராட்சி மூலம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆடுகளின் உரிமையா ளரிடம் புகார் மனு பெற்று இறந்த ஆடுகள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×