search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
    X

    கோப்புபடம்

    தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

    • 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன.
    • நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்குட்பட்ட வாா்டு எண் 11, 13, 14 ஆகிய வாா்டுகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 13 -வது வாா்டுக்குட்பட்ட டிடிபி., மில் பகுதியில் கடந்த 10 நாள்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் என பலரையும் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன.

    தெருநாய்கள் தொல்லை தொடா்பாக புகாா் அளிக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து சென்று கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டுச் செல்வதால் நாய்களின் இனப்பெருக்கமும் அதிகரிக்கிறது. ஆகவே தெருநாய்களை கட்டுப்படுத்தவும், நாய்க்கடியில் இருந்து மக்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×