search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்; நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    நகர்மன்ற கூட்டம் நடந்தது.

    சாலையோரம் குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும்; நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார்.
    • நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சாதாரணக்கூட்டம் நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் வாசுதேவன், துணை தலைவர் ம.சுப்பராயன், மேலாளர் காதர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, நித்தியாதேவி பாலமுருகன்: எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. நகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் தெருக்களிலேயே எரியூட்டுகின்றனர். அதனை தடுத்துநிறுத்த வேண்டும்.

    ஜெயந்திபாபு: பண்டாரகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். ராமு: மீன்மார்கெட் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். காய்கனி மார்கெட் குப்பைகள் அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி பிரதான சாலையோரம் வைக்கப்பட்டு வருவதால் நாள்தோறும் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்லவேண்டும்.

    வள்ளி முத்து: நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் இருசக்கர வா–கனங்களிலோ, நடந்தோ செல்லமுடியவில்லை. நாய்கள் துரத்தி கடிக்கிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ராஜசேகரன்: எரியவாயு தகனமேடையில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களை மாற்றிவிட்டு தற்காலிக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் பங்கேற்றனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சார்லஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×