search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Condolence"

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக தொண்டர்கள் அமைதி பேரணி நடத்தி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இழப்பைத் தாங்க முடியாத தொண்டர்கள் கண்ணீரஞ்சலி, இரங்கல் கூட்டம் என பல்வேறு வழிகளில் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரின் நினைவிடத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi
    திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க முத்து இன்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #MKMuththu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார். அவரது மறைவை ஏற்க முடியாத தமிழக மக்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #MKMuththu
    உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த, பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RIPKalaignar
    சென்னை:

    94 வயதான திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்று இரவு அவரது கோபாலபுரம் இல்லம் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை ராஜாஜி ஹாலில் வைக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும், பிரதமர் மோடியும் நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #RIPKalaignar
    வயதுமூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இந்த செய்தி அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, நடிகர் ரஜினி உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    அதன்படி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இழப்பு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar
    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #RIPKalaignar
    புதுடெல்லி:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி மிகவும் சோகத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார். #RIPKalaignar
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹி உயிரிழந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 92 வயதான இவர், மத்திய அரசின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரியாக இருந்தவர்.



    இவரது இறப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பக்கத்தில், 'காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹியின் இறப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, இன்று காலை மரணமடைந்த கோவாவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சந்தாராம் நாயக்கின் மரணத்துக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். #Sterliteprotest #policefiring #MamataBanerjee
    கொல்கத்தா:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்தும்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதையடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் கூறுகையில், நான் பெங்களுரில் சென்று இறங்கிய சிறிது நேரத்தில் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

    துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #Sterliteprotest #policefiring #MamataBanerjee
    ×