search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chess"

    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செஸ் விளையாடிய உள்ளனர்.
    • தமிழகம் தான் செஸ் விளையாட்டின் தாயகம்.

    திருபுவனம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் இதை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல என்றார்.

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம் தான் என்றும் கூறினார். 

    • எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி நடந்தது.
    • ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பெருங்குடியில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில் 44-வது ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை கொண்டாடும் வகையில் மாநில செஸ் போட்டி நடந்தது.

    ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஸ்ரீனிஷ் உதயன், எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்ட்ரிபள்ளி அஸ்வின், விசாகா பள்ளி மிர்துன்ராஜ், சி.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி கெவின்பாரதி, ஜீவனா பள்ளி ஜெய்ஆகாஷ், மகாத்மா பள்ளி அனுஷ்கா, சேதுபதி பள்ளி விஷ்ணுவர்தன், அண்ணாமலையார் பள்ளி கதிர்காமன் முதல் 10 இடங்களை வென்று பரிசுகள் பெற்றனர்.

    மாணவியருக்கான சிறப்பு பரிசில், ஒத்தக்கடை அரசு பள்ளி சங்கீதா, ராஜ் மெட்ரிக் பள்ளி தரணி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, கேட்டிவிகாஷ் பள்ளி 7 வயது சக்தி சந்தானம் இளம் வீரருக்கான பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்ற அமுதம் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பள்ளிக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். மாவட்ட சதுரங்க சங்க முதுநிலை ஆர்பிட்டா அரசப்பன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் செஸ் போட்டியை பிரபலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி ல்வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் ,முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், மேகலா மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து துறைஅதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்நடத்துவது என்றும், வருகிற 27ஆம் தேதி வேதாரண்யத்தில் மிக பிரம்மாண்டமான விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    • மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
    • உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மதுக்கூர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகாலிங்கம், வட்டார கல்வி அலுவலர் மனோகரன், தலைமை ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தனர். உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    இந்த செஸ் போட்டியின் ஆர்பிட்டராக மனிஷா செயல்பட்டார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஒன்றிய அளவிலான போட்டியில் வெல்பவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சதுரங்க விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    தமிழகத்தில் முதன்முறையாக தமிழக அரசின் சார்பில் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

    இந்த போட்டிகள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் ஆகியோர் கூட்டாக இணைந்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலமிடும் நிகழ்ச்சி நடந்தது. அதை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட அலுவலர் வானதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள்.
    • 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகத்தில் வைத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் ஒலிம்பியாட் சின்னம் வரையும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

    பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்புரை ஆற்றினார். இலஞ்சி டேனியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.

    ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை விஜி முத்துமாரி மற்றும் கார்த்திக் செய்திருந்தனர்.

    • மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும்.
    • 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக சதுரங்கபோட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். போட்டியினை சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளி லிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், செல்வராஜ், மோகன் செய்திருந்தனர்.

    இதில் பள்ளி மேலா ண்மை குழு தலைவர் தமிழரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் பூவரசன், ஆசிரியர் சங்க தலைவர் கோவி.நடராஜன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக செஸ் ஒலிம்பியாட் ஜோதி 26-ந்தேதி வருகை தருவதாக கலெக்டர் கூறினார்.
    • மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந்தேதி முதல் சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 26-ந்தேதி மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முன்னோடியாக ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து பொது இடங்களில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகின்றனரோ அங்கெல்லாம் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்து மக்களும் இந்த செஸ் ஒலிம்பியாட்டை கொண்டாட வேண்டும். செஸ் விளையாட்டு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ- மாணவிய ர்களுக்கான சதுரங்க போட்டி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சாய் நாதன், கலை வாணன், தமிழ்வாணன் ஆகியோர் சதுரங்க போட்டி யில் நடுவராக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.

    ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்றனர்.

    போட்டியில் இளையோர் பிரிவில் திருமீயச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பாவேந்தன் முதலிடத்தையும்,கோவில் திருமாகாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புருஷோத் இரண்டா மிடத்தையும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சர்மால்ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

    மேலோர் பிரிவில் சன்னாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அட்சயா இரண்டாமிடத்தையும், உபய வேதாந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆப்ரின்ஷிபானா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.மேன்மேலோர் பிரிவில் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடத்தையும், பணங்குடி அரசு மேல்நிலை ப்பள்ளி ராஜபிரியன் இரண்டாமிடத்தையும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ராம்பிரசாத் மூன்றா மிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள்மேல்நி லைப்பள்ளி தலைமை யாசிரியர் சான்றி தழ்களை வழங்கினார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை‌ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • இப்போட்டியில்‌ 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலையில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி கபிலர்மலை‌ அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு‌ தலைமை ஆசிரியை மெஹருன்னிஷா தலைமை வகித்தார்.உடற்கல்வி ஆசிரியர் ரவீந்திரன் வரவேற்றார்.பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது.

    இப்போட்டியில்‌ 72 மாணவர்களும், 69 மாணவிகளும் கலந்து கொண்டனர்.வெற்றிபெற்ற‌ மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பரமத்தி வட்டார அளவிலான சதுரங்க போட்டி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.சதுரங்க போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    வட்டார கல்வி அலுவலர் கொளரி, தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×