என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சதுரங்க போட்டி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    சதுரங்க போட்டியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சதுரங்க போட்டி- எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும்.
    • 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பாக சதுரங்கபோட்டி நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். போட்டியினை சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து, மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் சீர்காழி தாலுக்கா பகுதி மாணவர்கள் பங்கேற்று பெருமை சேர்க்கவேண்டும் என்றார்.

    இப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளி லிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாண விகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், செல்வராஜ், மோகன் செய்திருந்தனர்.

    இதில் பள்ளி மேலா ண்மை குழு தலைவர் தமிழரசி, ஒன்றியக்குழு உறுப்பினர் பூவரசன், ஆசிரியர் சங்க தலைவர் கோவி.நடராஜன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×