அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி

ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒன்றிய அளவிலான அரசு பள்ளி மாணவ- மாணவிய ர்களுக்கான சதுரங்க போட்டி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமையாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் சத்திய சாய் நாதன், கலை வாணன், தமிழ்வாணன் ஆகியோர் சதுரங்க போட்டி யில் நடுவராக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தனர்.

ஏராளமான பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் இளையோர் பிரிவில் திருமீயச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் பாவேந்தன் முதலிடத்தையும்,கோவில் திருமாகாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புருஷோத் இரண்டா மிடத்தையும், பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சர்மால்ராஜ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மேலோர் பிரிவில் சன்னாநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தையும், பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அட்சயா இரண்டாமிடத்தையும், உபய வேதாந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆப்ரின்ஷிபானா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.மேன்மேலோர் பிரிவில் பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடத்தையும், பணங்குடி அரசு மேல்நிலை ப்பள்ளி ராஜபிரியன் இரண்டாமிடத்தையும், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ராம்பிரசாத் மூன்றா மிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாண வர்களுக்கு நன்னிலம் அரசு ஆண்கள்மேல்நி லைப்பள்ளி தலைமை யாசிரியர் சான்றி தழ்களை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com