search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrayaan 3"

    • வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    • நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

    பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம்.

    அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

    இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

    இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

    நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    • பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.
    • சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்தது.

    கோவை:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.

    14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

    • லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
    • நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    இதன் பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை.

    இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

    14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும்.

    இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்நிலையில், நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 14 நாள் உறக்கத்துக்கு பிறகு இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை.

    நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    • ரோவரில் உள்ள ‘லிப்ஸ்' எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
    • 14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

    தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

    ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது இரவு நேர பகுதியாக உள்ளது.
    • விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை மறுநாள் (22-ந்தேதி) சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்தது.

    இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளிருந்த பிரக்யான் ரோவர் ஆகியவை தனது பணிகளை தொடங்கியது.

    எனவே விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை தனது பணிகளை செய்து பூமிக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி வைத்தது.

    லேண்டர், ரோவர் ஆகியவை சூரிய மின் சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் அது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது. அதனை பயன்படுத்தி லேண்டரும், ரோவரும் செயல்பட்டது.

    சந்திரனின் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு இருக்கும். இதை கணக்கீட்டு 14 நாட்கள் தனது பணியை செய்த லேண்டர் மற்றும் ரோவர் சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தற்போது சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது இரவு நேர பகுதியாக உள்ளது. எனவே லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. இதனால் அவை தற்போது இஸ்ரோவுடன் தொடர்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கும் போதே, மீண்டும் சூரிய ஒளி வரும்போது அவை தன்னை தானே செயல்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கி உள்ளனர்.

    அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை மறுநாள் (22-ந்தேதி) சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்னும் 2 நாட்களில் சூரிய ஒளி வரும்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொண்டு தனது ஆய்வு பணிகள நிலவில் தொடங்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

    திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வரும் நிலையில் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து விழித்து கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மேலும் லேண்டர், ரோவர் மீண்டும் ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் தரவுகள் மூலம் விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும் என்றும், இந்த தரவுகள் மூலம் எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சந்திரயான்-3 திட்டத்தின் இவ்வார் ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் சங்கரன் கூறுகையில், இதுவரை நிறைய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைக்க சில மாதங்கள் அல்லது 2 வருடங்கள் கூட ஆகும்.

    ஆனால் இந்த தரவுகள் சில புதிய விஷயங்களுக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் அதிக தரவுகள் கிடைக்கும். அது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    • ராஞ்சியில் உள்ளது ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனம்
    • இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறார்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.

    பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.

    இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

    ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள்.

    நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

    இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

    • கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 42 அடி உயரத்தில் முழுவதும் வெட்டிவேரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.
    • சிக்ஸ் பேக் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன.

    சென்னை:

    இந்து பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விநாயகர், சிவன், அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1,500 இடங்களுக்கு மேல் பிரமாண்ட ராட்சத விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு சம்பவங்களை முன்னிறுத்தி விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, சென்னை புறநகர் பகுதியான கீழ்கட்டளை மற்றும் கொளத்தூர் விநாயகபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் 'சந்திரயான்-3' நிகழ்வை நினைவூட்டும் வகையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன.

    சென்னையை அடுத்த கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையின் அருகில் ராக்கெட் ஏவுதளம் போல் வடிவமைக்கப்பட்டு அதில் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் ராக்கெட் புகையை கக்கியபடி மேலே செல்வது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகர், லேப்டாப் மூலம் 'சந்திரயான்-3' ராக்கெட்டை விண்ணில் ஏவுவது போன்று அமைந்துள்ளது.

    விநாயகர் சிலை அருகில் உள்ள டி.வி.யில் கவுண்ட்டவுன் ஒலித்ததும், விநாயகர் இயக்கும் இந்த ராக்கெட் புகையை கக்கியபடி விண்ணை நோக்கி சுமார் 40 அடி தூரம் மேலே எழும்பி, மீண்டும் பத்திரமாக தரையில் இறங்குவது போன்று மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    அதேபோன்று, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அண்டவெளி போல் கூடாரம் அமைக்கப்பட்டு அதில் சந்திரனின் மேல் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது போன்று பிளக்ஸ் பேனரால் வடிவமைக்கப்பட்டு, ராட்சத விநாயகரின் முன்பு பெரிய அளவிலான பிறை வடிவ சந்திரனை அமைத்து இருந்தனர். இதனையும் பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.

    கொளத்தூர் விநாயகபுரத்தில் வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான்-3' விநாயகர் சிலையானது, தமிழ்நாடு அரசு சின்னம், தேசிய கொடி பொறிக்கப்பட்டிருந்த ராக்கெட் வடிவில் கூடாரம் அமைத்து அதற்கு உள்ளே பிரமாண்டமாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' படத்தின் கதாபாத்திர வடிவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

    இது தவிர, சென்னை வளசரவாக்கத்தில் செங்கோல் விநாயகர், கோடம்பாக்கத்தில் கருப்பு மற்றும் வெள்ளை எள்ளு விநாயகர், திருவல்லிக்கேணியில் உலகக் கோப்பை கிரிக்கெட் விநாயகர், தாதா விநாயகர், வீர விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. மணலி புதுநகரில் சுமார் 5 ஆயிரம் சோளங்களை கொண்டு 18 அடி உயரமும், 10 அகலமும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

    கொளத்தூர் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 42 அடி உயரத்தில் முழுவதும் வெட்டிவேரால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

    கொளத்தூர், ராம் நகரில் 11 அடி உயரத்தில் முழுவதும் சந்தனத்தால் ஆன 400 கிலோ எடை கொண்ட விநாயகர் சிலையும், மணலி சின்னச்சேக்காடு, காந்திநகர் பகுதியில் 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட பிள்ளையார் சிலையில், பூசணிக்காய், வாழைப்பூ, கேரட், அன்னாசிபழத்தால் தேசியக்கொடி போல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை பெரவள்ளூர் பகுதியில் முழுவதும் குபேரர் தகடால் ஆன 21 அடி விநாயகரும், திரு.வி.க. நகர் பகுதியில் தேங்காயால் வடிவமைக்கப்பட்ட விநாயகரும், கொளத்தூரில் 20 ஆயிரம் குபேர விளக்கு, 8 ஆயிரம் அரச இலைகளை கொண்டு 40 அடி உயரத்திலான பிரமாண்ட குபேரர் விநாயகரும், சென்னை சி.ஐ.டி. நகரில் 208 கிலோ அளவிலான மைசூர்பாகு கொண்டு 10 அடி உயர விநாயகர் சிலையும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இதே போன்று, சிக்ஸ் பேக் விநாயகர், கிரிக்கெட் விநாயகர், சைக்கிள் ஓட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த விநாயகர் சிலைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்ற இடங்களில் பக்தர்களுக்கு சுண்டல், பாயாசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டதுடன் ஏராளமான இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்காக நேற்று முன்தினம் இரவே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை விநாயகரை பொதுமக்கள் வீடுகளுக்கு வாங்கிச்சென்று வழிபட்டனர்.

    • ரோவரில் உள்ள ‘லிப்ஸ்' எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப்’ கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
    • தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு 'எல்.வி.எம்.3 எம்.4' ராக்கெட் மூலம் 'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

    இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த 'விக்ரம் லேண்டர்' 40 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு பிறகு 'விக்ரம் லேண்டரில்' இருந்து 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்தது. இதனை 'லேண்டர்' ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப்' கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

    தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் கடந்த வாரம் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் 'பிரக்யான் ரோவர்' உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரியன் உதிக்க இருக்கிறது. அப்போது மீண்டும் உறக்க நிலையில் இருக்கும் ரோவரில் உள்ள பேட்டரி உதவியுடன் தட்டி எழுப்பி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் லேண்டரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பி, ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

    தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வருகிற 22-ந் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரியன் உதயமாகும்போது சூரிய சக்தியை பெறும். ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் 'சுவிட்ச் ஆன்' ஆகி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    • தேசிய விடுமுறை இல்லாத தினங்களை தவிர வாரம் 5 நாட்கள் பங்குச்சந்தை செயல்படும்
    • நிஃப்டி வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது

    இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதும் விற்பதும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறும்.

    வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் இரண்டு குறியீட்டு எண்களில் ஒன்றான தேசிய பங்கு சந்தை குறியீட்டு நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த உயர்வு, நிஃப்டி வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.

    விண்வெளியில் உலகயே திரும்பி பார்க்க வைத்த சாதனை, ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, குறைந்து வரும் காய்கறிகளின் விலை, ஒரு வருடமாக அதிகரிக்காமல் இருக்கும் பெட்ரோல் விலை மற்றும் குறைய தொடங்கி இருக்கும் விலைவாசி ஆகிய காரணிகளால் இந்தியர்களின் "வாங்கும் சக்தி" உயரக்கூடும் என பெருமுதலீட்டாளர்கள் நம்புவதால் இந்த ஏற்றம் உண்டாகி இருப்பதாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்திய தொழில்துறையிலும், இந்திய பங்குச்சந்தையிலும் முக்கிய நிலையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகியவற்றை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனாலும் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என சில ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

    காலை தொடக்க நிலையிலிருந்து சந்தை நிறைவடையும் நேரத்திற்குள் நிஃப்டி 188 புள்ளிகள் உயர்ந்து 20 ஆயிரத்தை தொட்டு 19,996 எனும் அளவில் முடிவடைந்தது.


    கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச்சந்தை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.
    • சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    இதையடுத்த, 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை முடித்துக் கொண்ட ரோவர் உறக்க நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நிலவில் இருக்கும் சந்திரயான்- 3ன் லேண்டரை, சந்திரயான்- 2 ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    லேண்டரின் புதிய படமானது, சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.

    சந்திரயான்-2ன் இந்த ரேடர் கருவிதான், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படும் எடுத்து அனுப்பியது.

    • ஒட்டுமொத்த தோற்றம், சந்திரயான் 3 நிலவு திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடல் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் "மூன் எக்ஸ்புளோரர் எடிஷன்" (Moon Explorer Edition) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்று இருப்பதை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடலின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    புதிய டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை செப்டம்பர் 15-ம் தேதி துவங்க இருக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் FHD+ 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர்

    மாலி G52 GPU

    8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. விர்ச்சுவல் ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 12.6

    50MP டூயல் கேமரா செட்டப்

    32MP செல்ஃபி கேமரா

    டூயல் சிம் ஸ்லாட்

    4ஜி, வைபை, ப்ளூடூத்

    3.5mm ஆடியோ ஜாக்

    கைரேகை சென்சார்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்புளோரர் எடிஷன் மாடல் பிளாக் அண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள லெதர் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றும் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம், சந்திரயான் 3 நிலவு திட்டத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக மனைவிக்கு வாக்குறுதி.
    • லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு நிலவை பரிசளிப்பதாக சஞ்சய் தனது மனைவியிடம் வாக்குறுதி அளித்து இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்ற ஆசை, இந்தியா நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் தான் வந்தது என்று சஞ்சய் மேலும் தெரிவித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்ற பிறகு, தன்னால் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியை செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

     

    நானும், எனது மனைவியும் நீண்ட காலம் காதலித்து, கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டோம். நான் அவரிடம் நிலவை கொண்டுவருவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், என்னால் அப்படி செய்ய முடியவில்லை. தற்போது எங்களது திருமணத்திற்கு பிறகு வந்த அவளின் முதல் பிறந்தநாளில், நான் அவருக்கு நிலவில் இடம் வாங்கி பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்," என்று சஞ்சய் மஹாட்டோ தெரிவித்து உள்ளார்.

    தனது நண்பர் உதவியுடன், லூனா சொசைட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் நிலவில் நிலம் வாங்கியதாக சஞ்சய் தெரிவித்தார். இதற்கான வழிமுறைகள் நடைபெற்று முடிய ஒரு ஆண்டுகாலம் ஆனதாக அவர் மேலும் தெரிவித்தார். நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றையும் சஞ்சய் மஹோட்டா தன்னிடம் வைத்திருக்கிறார்.

    முன்னதாக 2020 ஆண்டு வாக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரை சேர்ந்த நபர் தர்மேந்திர அனிஜா, தனது மனைவிக்கு நிலவில் மூன்று ஏக்கர் நிலத்தை பரிசாக கொடுத்தார். தனது எட்டாது திருமண நாளை கொண்டாடும் வகையில், மனைவிக்கு நிலவில் நிலத்தை பரிசளித்ததாக அவர் தெரிவித்து இருந்தார்.

    ×