search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோவர்"

    • சந்திரனுக்கு வெளியில் இருந்து ரோவர் இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது.
    • நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் பாதிக்கப்படலாம்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சார்பில் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆகஸ்டு 23-ந்தேதி அதன் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

    நிலவில் தரையிறங்கிய ரோவர் தொடர்ச்சியான சோதனை நடத்திய பிறகு அது தற்போது நிலவில் தூக்க நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் நிலவில் ரோவர் தூக்க நிலையில் இருப்பதால் அதற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. சந்திரனுக்கு வெளியில் இருந்து ரோவர் இந்த அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது.

    நிலவின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் விண் கற்கள் விழும். நிலவில் நுண் விண் கற்கள் விழும் போது குண்டு வெடித்தால் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும்.

    தற்போது நிலவில் நுண் விண் கற்கள் விழுகிறது. சந்திராயன்3 ரோவர் நிலவில் தூங்கும் நிலையில் அந்த பகுதியில் நுண் விண்கல் விழுந்தால் அது ரோவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ரோவர் மீது நுண் விண்கல் விழுந்தால் அது வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் பாதிக்கப்படலாம். அப்பலோ விண்கலம் கடந்த காலங்களில் இதே போன்ற பிரச்சினையை சந்தித்தது. இதனால் ரோவர் சில சேதங்களை சந்திக்கலாம்" என்றனர்.

    • புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும்.
    • இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் உறக்க நிலையில் இருந்து இன்னும் விழிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு குறைவான நிலையில் அமாவாசை முடியும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்போம் என ஏற்கெனவே விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

    இந்த சூழலில் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசை கலனுடன் ஏற்கனவே ஸ்பெக்ட்ரோ-போலரி மெட்ரி ஆப் ஹேபிடபிள் பிளானட் எர்த் (ஷேப்) என்ற ஆய்வுக்கருவி அனுப்பப்பட்டிருந்தது. இந்த கருவி நிலவை 52 நாட்களாக சுற்றி வருகிறது. இதுவரை அதன் செயல்பாடுகளில் போதுமான தகவல்களை அனுப்பியுள்ளது. இது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு புவி நோக்கி நிறமாலைக் கதிர்களை அனுப்பும். அதன்மூலம் புவியில் உள்ள உயிர் வாழ் சூழலைக் கண்டறிந்து நிலவுடன் ஒப்பிட்டு பார்க்க வழிசெய்யும். அதாவது, அந்த கதிர்களின் பிரதிபலிப்பைக் கொண்டு அங்கு கார்பன், ஆக்சிஜன் உள்ளதா? என்பதைக் கண்டறிந்து அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்பதை அறியலாம். எதிர்காலத்தில் பிற கோள்களிலும் இத்தகைய ஆய்வை நடத்தி அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய உதவும்.

    இதன் ஆய்வு முழுமை அடையவும், கண்டுபிடிப்புகள் ஏதேனும் இருந்தால் அறிவிக்கப்படவும் பல மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    சந்திரயான்-3 உந்துவிசை தொகுதி, ஆரம்பத்தில் விக்ரம் மற்றும் பிரக்யான் அடங்கிய தரையிறங்கும் தொகுதியை சந்திரனுக்கு கொண்டு செல்வதற்கும், அதைச் செய்வதற்கு பொருத்தமான சுற்றுப்பாதையை அடைந்தவுடன் அதிலிருந்து பிரிப்பதற்கும் மட்டுமே திட்டமிடப்பட்டது. இருப்பினும், இஸ்ரோ, அதன் முழுப் பயனைப் பெறுவதற்காக, தொகுதிக்கு ஷேப் கருவியை சேர்த்தது என்பது குறிப்பித்தத்தக்கது.

    • வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    • நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

    பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம்.

    அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

    இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

    இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

    நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    • சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
    • லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.

    சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.

    இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை(வெள்ளிக்கிழமை) நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.

    செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். #Curiosity #NASA
    நியூயார்க்:

    பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 

    அமெரிக்கா கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், 5 வருடங்களாக செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

    350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் ஆகஸ்ட் 6, 2012 அன்று வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய கியூரியாசிட்டி, மொத்த பணியில் 23 சதவிகிதத்தை முடித்துள்ளது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சேமித்த தகவல்களை பூமிக்கு அனுப்ப முடியாமல் கியூரியாசிட்டி இயக்கத்தை நிறுத்தியுள்ளது. 

    இதனை, சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகவும், விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
    ×