சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்த சந்திரயான்- 2: புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 லேண்டரை படம் பிடித்த சந்திரயான்- 2: புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
Published on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

இதையடுத்த, 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை முடித்துக் கொண்ட ரோவர் உறக்க நிலையில் உள்ளது.

இந்நிலையில், நிலவில் இருக்கும் சந்திரயான்- 3ன் லேண்டரை, சந்திரயான்- 2 ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

லேண்டரின் புதிய படமானது, சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.

சந்திரயான்-2ன் இந்த ரேடர் கருவிதான், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படும் எடுத்து அனுப்பியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com