search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebration"

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
    • ரெங்கநாச்சியர் நவராத்திரி உற்சவம்


    திருச்சி


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தாயார் திருவடி சேவை 21-ந் தேதி நடைபெறுகிறது.


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்குகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ் தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார். கொலு இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறும். இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.


    2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 20-ந்தேதி மற்றும் 8ம் திருநாளான 22-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ் தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 21–ந்தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.


    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




    • கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.
    • பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் அங்கமான கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் 20ம் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் புனிதா ஜோஸ்பின்வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் பேரவையின் பதிவாளர்

    ஆனாகிரேஸ் கலைமதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    பேராசிரியர் கிருபா ஏஞ்சலன் கல்லூரியின் 20 வருட முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். மேலும், கடந்த 20 ஆண்டு காலமாக நடந்த கல்லூரியின் சிறப்பு குறித்து புத்தகம் வெளியிடப்பட்து.

    தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியர்கள், சேவையாற்றிய மாணவர்களுக்கும் விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி மருத்துவமனை சுகாதாரம் மற்றும் அவுட் ரீச் சேவை பிரிவு இயக்குனர் பேராசிரியர் நிர்மல்குமார், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி முதல்வர் கோஷ், பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் சுமதி நன்றி கூறினார்.

    • மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
    • அக்டோபர் 11-ந்தேதி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டம்

    கோவை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்ட மேலாண் இயக்குநர் ஜோசப் டையஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், கோவை கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் அக்ேடாபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதன் தொடக்கமாக, கோவை தலைமை அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல, ஈரோடு, திருப்பூர் மற்றும் ஊட்டி மண்டலங்களிலும் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, அக்டோபர் 8-ந் தேதி நாளை விழிப்புணர்வு மாரத்தான், நடைப்பயணம் நடைபெற உள்ளது.

    இந்தப் பேரணியானது, கோவை அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி, கவுண்டம்பா ளையம், சேரன் மாநகர் வழியாக மீண்டும் அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நிறைவு பெறவுள்ளது. அதே நாள் பொள்ளாச்சியிலும் விழிப்புணர்வு நடைப்ப யணம் நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில், பொதுமேலாளர்கள், துணை மேலாளர்கள், பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாரத்தான், நடைப்பயணத்தை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். கோவை தலைமையகத்தில் அக்டோபர் 11-ந் தேதி பணியாளர்களுக்கு தகவல் உரிமைச் சட்டப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது.
    • தச்சநல்லூரில் பால்கண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது. இதனையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின்பேரில் தச்சநல்லூரில் முன்னாள் நெல்லை தொகுதி செயலாளரும், டவுன் கூட்டுறவு நகர வங்கி தலைவருமான பால்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் சக்திகுமார், பகுதி துணைச்செயலாளர் பழனி சுப்பையா, சத்ய முருகன், பால்ராஜ், கேபிள் சுப்பையா, கோல்டு கண்ணன், போர்வெல் மணி, வெள்ளரி அய்யப்பன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    • நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி உடுமலை நினைவு மண்டபத்தில் உள்ள நாராயகவி உருவசிலைக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் பூளவாடி கிராமத்தில் கிருஷ்ணசாமி செட்டியார் -முத்தம்மாள் தம்பதியினருக்கு 25.9.1899ம் ஆண்டு மகனாக உடுமலை நாராயணகவி பிறந்தார். பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் ஆவார்.75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.

    தமிழ் திரைப்பட பாடல் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த உடுமலைநாராயணகவி பகுத்தறிவு கவிஞர் ஆவார். இவரது பாடல்களின் சிறப்பை பாராட்டி22.4.1967 ம் ஆண்டு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் சாகித்யா ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.

    மேலும் இவர் பாரதிதாசன், பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கவிஞர் கண்ணதாசன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை முதலான கவிஞர் பெருமக்களுடன் நெருங்கிய நட்புண்டு சிறப்பான பணியை வெளிப்படுத்தினார்.26.6.1944 ல் திருச்சியில் நடைபெற்ற அண்ணாவின் ஓர் இரவு நாடகத்தில் இவரது பாடல் இடம் பெற்றது.

    இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 23.5.1981ல் காலமானார்.இவரது நினைவாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உடுமலை நாராயணகவி மணிமண்டபம் 23.2.2001 அன்று திறந்து வைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டைதிடல் அருகில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் உள்ள நாராயணகவியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

    விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் , திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன்,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, அரசு அலுவலர்கள், உடுமலை நாராயண கவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ‘ஹாப்பி ஸ்டீரிட்’ கொண்டாட்டம் நடந்தது.
    • பெண்கள் மயங்கி விழுந்ததால் இடையில் நிறுத்தப்பட்டது.



    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்களின் ஒரு பகுதி.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் இன்று 'ஹாப்பி ஸ்டீரிட்' விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, தளபதி எம்.எல்.ஏ., ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நடிகர் சூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வாவ் மதுரை லோகோவை அமைச்சர்கள் வெளியிட்டனர். இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். அண்ணாநகர் சுகுனா ஸ்டோர் பகுதியில் இருந்து மேலமடை சந்திப்பு வரை உள்ள சாலை முழுவதும் இளம்பெண்கள், சிறுவர்-சிறுமிகள், வாலிபர்கள் திரண்டிருந்தனர்.

    ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம், வேடிக்கை விளையாட்டு கள் என நிகழ்ச்சி களை கட்டியது. பலர் தொடர்ந்து உற்சாக கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். குறுகலான சாலையில் ஆயிரக்க ணக்கானோர் திரண்டதால் நெரிசல் அதிகமாக இருந்தது. சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு மக்கள் குவிந்தி ருந்தனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாலும், நெரிசலில் சிக்கியும் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை யோரம் அவர்களை அமர வைத்து தண்ணீர், பழச்சாறு கொடுத்து ஆறுதல் படுத்தினர்.

    அடுத்தடுத்து பல பெண்கள் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி இடையிேலயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    • சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமே கலை பாக்கியராஜ், மனித நேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி,

    தி.மு.க. மாவட்ட பிரதிநி திகள் முருகன், நரிப்பையூர் லாரன்ஸ், சாயல்குடி நீர்ப் பாசன சங்க தலைவர் ராஜா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில பிரதிநிதி வழக்கறிஞர் சம்சுதீன் சேட் வரவேற்றார். பெரியாரின் திரு உருவப்ப டத்திற்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச் சாமி, காங்கிரஸ் கட்சி சேவா தள தலைவர் கணேசன், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஒன்றிய கவுன்சிலர் பெரோஸ் பானு ஜலில், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் பிரதிநிதிகள் சகாயராஜ், மைக்கேல்ராஜ், சாயல்குடி வார்டு உறுப்பி னர் அமுதா, தி.மு.க. கிளைச் செயலாளர் பாண்டி, மாரி யர் தி.மு.க. கிளைச் செய லாளர் ஆறுமுகம், வாலி நோக்கம் கிளை செயலாளர் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • மணிமூர்த்தீஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இந்த நாளில் விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் துன்பங்களும், துயரங்களும் உடனே நீங்கி விடுவதாக நம்பி அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மணிமூர்த்தீஸ்வ ரத்தில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தில் கடந்த கடந்த 9-ந்தேதி சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாரதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும், அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாரா தனைகளும் நடைபெற்றன. கோவிலில் வழிபாடுகள் இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் மாபொடி, மஞ்சள் வாசனைபொடி, பால், தயிர், பஞ்சாமிருதம், தேன் என 16 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீமூர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.

    தியாகராஜநகர் விக்னவிநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி காலையில் சுவாமிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு விநாயகர் தேரில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. நெல்லை மாநகரத்தில் இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டை போல் 76 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடைபெறுகிறது. நெல்லை டவுன் ஈசான விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    போலீஸ் பாதுகாப்பு

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 242 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    களக்காடு, திருக்குறுங்குடி, மானூர், வள்ளியூர், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள பிள்ளையார் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள், கொழுக்கட்டைகள் வைத்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

    மாநகர இந்து முன்னணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அருகே 9 அடி உயர பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மாநகர இந்து முன்னணி நிர்வாகிகள் இசக்கிமுத்து, ராகவேந்திரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்

    திருச்செந்தூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அருகில் சானாதன கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில்களில் நடந்த சதுர்த்தி விழாவில் பக்தர்கள் எருக்கம் பூ மற்றும் அருகம்புல் ஆகியவற்றை மாலையாக கொண்டு வந்து விநாயகருக்கு சூட்டினர். மேலும் அவர்கள் கொண்டுவந்த நைவேத்திய பொருட்களான சுண்டல், பிடி கொழுக்கட்டை, மோதகம், அப்பம், அவல், பொரி, உள்ளிட்டவற்றையும் விநாயகருக்கு படைத்தனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் மட்டும் வழக்கம்போல் இந்த ஆண்டும் 37 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி அங்கு மட்டும் சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் மொத்தம் 320 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாது காப்புக்காக போடப்ப ட்டுள்ளனர். இதுதவிர இன்று சதுர்த்தி விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்கள் விழாக்கோலம் பூண்டன.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் பெரியாரின் 145-வதுபிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரம், சந்தை வாசல், தமிழன் லாரி எடை நிலையம் ஆகிய இடங்களில் திராவிட கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்ட காப்பாளர் சு.தனபாலன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.

    உசிலை மாவட்டத் தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    இதில் தங்கராஜ், அர்ச்சுதன், கண்ணன், சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட துணை தலைவர் கவிஞர் பொன். கலை தாசன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். தி.மு.க. சார்பாக போடி நாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அதியர்பிரிய ன் வரவேற்றார். கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ ம் மாலை அணிவித்தார். இதில் முரளி, வீரன், அகத்தியன், முத்து சிவா, ஸ்ரீராம், சிவகுமார், சந்தன மாரி, பழனியம் மாள், பாண்டியம் மாள், கிருஷ்ணா மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமாயன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் மரியாதை செலுத்தப் பட்டது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செய லாளர் பெரியபாண்டி செல்லராஜ், ராமகிருஷ் ணன், நகர் செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பி னர்கள் புலிப்பாண்டி, மகேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதய ராஜன், எழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெய பாலன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    திராவிட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், நகர தலைவர் பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமா யன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
    • பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    திருப்பூர்

    திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பாக பொறியாளர்கள் தின விழா சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் ராஜேஷ் தமிழரசன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    சங்க மாநில செயலாளர் பொறியாளர் காந்தி, மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன்,குமார்,ரமேஷ், பொன்னுச்சாமி, ரத்னசபாபதி, மணிகண்டன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் நடைபெற்றது.
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை ஓய்ஸ்மேன் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனரும், முதல்வருமான சரோஜாபாபு தலைமை தாங்கினார்.

    துணை முதல்வர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னர்களாக ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் இயக்குனர் வெற்றிச்செல்வன், இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியளித்த மாணவர்களையும், ஆசிரி யர்களையும் பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினர்.

    மேலும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

    தொடர்ந்து மாண வர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    ×